முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசில் செல்கிறார் சல்மான் குர்ஷித்

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக். 13 - வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வரும் 14 ம் தேதி முதல் 17 ம் தேதி வரை பிரேசில் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலுடன் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த அவர் இப்பயணத்தை மேற்கொள்கிறார். தமது பயணத்தின் போது பிரேசிலியா நகரில் நடக்கும் 6 வது இந்திய பிரேசில் கூட்டு ஆணையத்தின் கூட்டத்தில் குர்ஷித் கலந்து கொள்கிறார். இதில் பிரேசில் வெளியுறவு துறை அமைச்சர் ஆல்பர்டோ பிகிரேடோவும் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் இரு தரப்பும் அரசியல், பொருளாதார, வர்த்தக, வேளாண், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு, கலாசாரம், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் டெல்லியில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் கடந்த 2012 மே மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago