முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் தி.மு.க. வார்டு செயலாளர் உட்பட 4 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      தமிழகம்
Image Unavailable

திருமங்கலம், மே.15 - திருமங்கலம் நகரில் பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்ட சம்பவத்தில் தி.மு.க. வார்டு செயலாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த தி.மு.க. வினர் திருமங்கலம் நகரில் நடத்திய வன்முறை வெறியாட்டத்தின் போது 3 அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்சின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டன. இதுபற்றி தகவலறிந்த மதுரை சரக டி.ஐ.ஜி சந்தீப்மிட்டல், மதுரை எஸ்.பி., அஸ்ரா கார்க் ஆகியோர் திருமங்கலம் நகருக்கு விரைந்து வந்து குற்றவாளிகள் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டனர். அதன்பேரில் டி.எஸ்.பி முருகேசன் உத்தரவின்பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய டவுன் போலீசார் பஸ்களை கல்வீசி தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய 6 வது வார்டு தி.மு.க. செயலாளர் கணேசன்(எ)மைனா கணேசன், தி.மு.க. நகரச்செயலாளரின் கார் டிரைவர் பாண்டி, காங்கிரஸ் பிரமுகர் முருகேசனின் மகன் செல்வகுமார், மறவன்குளம் மகேஷ்வரன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரும் திருமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதி ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago