முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.17 - ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் போக்குரவத்து செயலாளர் பிரபாகர் ராவ் கலந்துக்கொண்டார். தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் சார்பில் பாதுகாப்பு குறித்த பயிற்சி கருத்தரங்கு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து செயலாளர் பிரபாகர் ராவ், போலீஸ் துணை கமிஷனர் பன்னீர்செல்வம் சங்கத்தின் சேர்மன் கே.பி.நடராஜன், தலைவர் அப்சல், பொருளாளர் மாறன், செயலாளர் சி.சூரியகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கில் பேசிய போக்குவரத்துச் செயலாளர் பிரபாகர் ராவ் ஓட்டுநர்கள் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போருந்து ஓட்ட வேண்டும். அவர்களை நம்பி தான் பயணிகளும் பேருந்தில் பயணம் செய்கிறார்கள். தற்போது அரசு சார்பில் ரூ.10 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பேருந்து ஓட்டுநர்கள் எப்படி ஓட்டுகிறார்கள் என்று அது முழுமையாக எடுத்துக்காட்டும் அதன் மூலம் ஓட்டுநர் தகுதி உடையவர்களா என்று போக்குவரத்துறை முடிவு செய்து ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். 

இதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம். மேலும் சென்னை அருகே செக்போஸ்டில் அதிக எடைகளை ஏற்றும் வாகனங்களை கண்டுபிடிப்பதற்காக 120 கோடி செலவில் எடை போடும் மிஷினுடன் இன்டிகிரோட்டர் செக்போஸ்ட் அமைக்கப்படுகிறது. இதற்காக வேகமாக அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. சாலை விபத்திகளை தடுப்பதற்கு விழிப்புணர்வு மூலம் விபத்துகளை தடுக்கலாம். நல்ல முறையில் பாதுகாப்பாக ஓட்டுநர்கள் ஆம்னி பஸ்களை ஓட்டவேண்டும். விபத்துகளை தவிர்க்க பாதுகாப்பாக இருப்போம் என்றார்.

விழாவில் போலீஸ் துணை கமிஷனர் பன்னீர்செல்வம் ஓட்டுநர்களின் பாதுகாப்பான முறைகள் குறித்து அவர்கள் எவ்வோறு ஒட்டவேண்டும் என்று ஓட்டும் போது மது அருந்தாமல் ஒட்டவேண்டும் என்ற கருத்துக்களை கூறினார்.

கருத்தரங்கில் சேர்மன் கே.பி.நடராஜன், தலைவர் அப்சல், பொருளாளர் மாறன் உள்ளிட்டோர் பேசினார்கள்.

தமிழ்நாடு ஆம்னி பேருந்து கூட்டமைப்பின் சார்பில் அதன் நிர்வாகிகள் கூறியதாவது:_

பயணிகளுக்கு தரமான மற்றும் சௌகரியமான சேவையை அளிப்பதற்கும் அனைத்து ஆம்னி பேருந்து ஓட்டுநர்களும் ஒரே கூரையின் கீழ் பணிபுரியவேண்டும் என்பது தான் முக்கிய குறிப்பு. இந்த 6 மாதத்திற்கும் ஒரு முறை அனைத்து ஓட்டுநர்களுக்கும்  தேவையான தகுந்த பயிற்சி அளிக்க முன்வந்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony