முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை: அமைச்சர் அறிக்கை

திங்கட்கிழமை, 23 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,டிச.24 - எம்.ஜி.ஆரின் 26_வது நினைவு நாளையொட்டி மதுரையில் உள்ள அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. 

இதுகுறித்து மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ, விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:_

கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க கழகத்தின் நிறுவனர்,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 26_வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (24_ம் தேதி) மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கே.கே.நகர் ஆர்ச் அருகே உள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு மதுரை மாநகர் மாவட்ட கழக அவைத்தலைவர் புதூர் கே.துரைப்பாண்டியன் தலைமை வகிக்கிறார். நிகழ்ச்சியில் மாவட்டக்கழக,வட்டக்கழக, பகுதி, தொகுதி, பாகக்கழக நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள், இளைஞர், இளம்பெண், பாசறை நிர்வாகிகள், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி நிர்வாகிகள், கழகத்தின் மூத்த முன்னோடிகள்,தொண்டர்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்துகொண்டு மரியாதை செலுத்திட வேண்டுகிறேன். 

மேலும் மதுரை மாநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் எம்.ஜி.ஆரின் உருவப்படத்தை அலங்கரித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony