முக்கிய செய்திகள்

மும்பை தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் அமைப்புதான்

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      உலகம்
John mccain1

 

வாஷிங்டன்,மே.22 - மும்பையில் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானின் சில அமைப்புகள்தான் என்று அமெரிக்காவின் முக்கியமான எம்.பி. ஜான் மிகைன் அடித்துக்கூறுகிறார். இந்த மாதிரியான பிரச்சினைக்கு விரைவில் தீர்வகாண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் அமெரிக்கர்கள் 6 பேர் உள்பட160-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் மற்றும் 300 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை நடத்தியது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு மற்றும் சில சக்திகளும்தான் என்று அமெரிக்க குடியரசு கட்சி எம்.பி. ஜான் மிகைன் ஆணித்தரமாக கூறியுள்ளார். இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மும்பை தாக்குதல் விஷயத்தில் இந்தியாவும் பிரதமர் மன்மோகன் சிங்கும் மிகவும் பொருமையாக இருக்கிறார்கள் என்று ஹெட்லைன் டுடே என்ற பத்திரிகைக்கு ஜான் மிகைன் பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். ஐ.எஸ்.ஐ. உளவு ஸ்தாபனத்திற்கும் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஹக்கானி இணையதளத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றார். அதேசமயத்தில் பாகிஸ்தானுடன் அமெரிக்கா தொடர்ந்து உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜான் மிகைன் மேலும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: