முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை : டாக்டர்கள் முடிவு

திங்கட்கிழமை, 30 மே 2011      சினிமா
Image Unavailable

சிங்கப்பூர், மே.- 30 - நடிகர் ரஜினிகாந்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி ராணா படத்தொடக்க விழாவில் கலந்து கொண்டு முதல் காட்சியில் நடித்தார். அதன் பின்னர் வீடு திரும்பிய அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்று கோளாறு காரணமாக வாந்தி எடுத்தார். இதையடுத்து சென்னை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு சிறுநீரக பாதிப்பும் ஏற்பட்டதால் போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது. சிறுநீரக பாதிப்புக்கு மேல் சிகிச்சை செய்வதற்காக விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுநீரக சிகிச்சையில் ஆசியாவிலேயே பிரசித்தி பெற்ற மவுண்ட் எலிசபெத் மெடிக்கல் சென்டர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினிகாந்த் நவீன வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டில் டாக்டர்கள் குழுவினர் உடனடி சிகிச்சையை துவங்கினர். முதலில் ரஜினியின் உடல் உறுப்புகள் பாதிப்பு குறித்து சென்னை டாக்டர்களுடன் சிங்கப்பூர் டாக்டர்கள் ஆலோசனை நடத்தினர். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்கள் பல்வேறு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்ட மருந்துகள் ஆகியவைகள் குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் ரஜினிக்கு சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரஜினி அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள். இங்கும் அவருக்கு மீண்டும் டயாலிசிஸ் செய்யப்பட்டது. நேற்று 2வது நாளாக டயாலிசிஸ் செய்யப்பட்டது. சென்னை மருத்துவமனையில் ரஜஜினிக்கு டயாலிசிஸ் செய்யும் போது அதிக வலி ஏற்பட்டதால் இங்கு வலியில்லாத முறையில் நவீன டயாலிசிஸ் செய்யப்பட்டது. டயாலிசிஸ் செய்யப்பட்ட பிறகு அவரது சிறுநீரகங்களின் செயல்பாடு குறித்து மீண்டும் பரிசோதனை செய்யப்படும். இதில் ஏற்படும் முன்னேற்றத்தை பொறுத்து அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்கிறார்கள்.
ஒருவருக்கு 2 சிறுநீரகங்கள் இருக்கும். ஒன்று செயல் இழந்தால் கூட மற்றொன்றின் மூலம் உயிர் வாழலாம். இரு சிறுநீரகங்களும் செயல் இழந்தால் டயாலிசிஸ் செய்து அதன்பிறகு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும். ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சையில் ஏற்படும் முன்னேற்றத்தைப் பொறுத்தே மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம் என்று சிறப்பு மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony