முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரஞ்சீவியை காணவில்லை என போலீசில் நூதன புகார்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூன் 2011      சினிமா
Image Unavailable

 

நகரி,ஜூன்.5 - தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் சிரஞ்சீவி. இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை தொடங்கி கடந்த தேர்தலில் திருப்பதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைப்பதாக தெரிவித்தார். அதன் பிறகு சிரஞ்சீவி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி கொண்டதாக அவருக்கு நெருக்கமான தலைவர்கள் கூறினர். அதை நிஜமாக்கும் வகையில் சிரஞ்சீவி, கடந்த 3 மாதங்களாக தான் வெற்றி பெற்ற தொகுதியான திருப்பதி தொகுதிக்கு வரவில்லை. 

இந்நிலையில் திருப்பதி கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் சிரஞ்சீவியை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் கடந்த 3 மாதங்களாக அவர் தொகுதி பக்கமே வராததால் ஆவேசமடைந்த மாணவர்கள் திருப்பதி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு திரண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் மனு கொடுத்தனர். 

அந்த மனுவில் எங்கள் தொகுதி எம்.எல்.ஏவான நடிகர் சிரஞ்சீவியை கடந்த 3 மாதங்களாக காணவில்லை. அவரை கண்டுபிடித்து தாருங்கள் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுவை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த போலீசார் மாணவர்களிடம் உங்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனுப்பி வைத்தனர். இதையடுத்து மாணவர்கள் திருப்பதி நகரம் முழுவதிலும் எம்.எல்.ஏ சிரஞ்சீவியை காணவில்லை. அவரை கண்டுபிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago