முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதரவற்றோருக்கு மதிய உணவு திட்டத்திற்கு மறுப்பு

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூன்.16 - ஆதரவற்றோர், வயோதிகர்களை பள்ளி மதிய உணவு திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற தேசிய உணவு பாதுகாப்பு மசோதா பரிந்துரைத்ததை மத்திய மனித வள அமைச்சகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. நாட்டில் உள்ள ஆதரவற்றோர், விதவைகள், வயோதிகர்கள், பொருளாதர ரீதியில் பின்தங்கியவர்களை அவர்களின் நிகழ்கால வாழ்வை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சத்தான உணவு அளிக்கவேண்டும். மேலும் பேரீடர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உணவளிக்க வேண்டும். அவர்களை பள்ளி மதிய உணவு திட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும். இவ்வாறு இந்த திட்டம் கொண்டுவரும் பட்சத்தில் மதிய உணவுக்கான பொருட்கள் வைக்கும் அறை மற்றும் சமயலறை பள்ளிக்கு வெளியே அமைக்க நேரிடும். அதனால் பள்ளி குழந்தைகளுக்கு கற்பித்தல் மற்றும் படித்தலில் ஏற்படக்கூடிய நேர இழப்புகள் தவிர்க்கப்படும் என தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவில் செய்திருந்தது. இந்த மசோதாவின் பரிந்துரைகள் பள்ளி வாரிய விதிமுறைக்கு முரணானது. மதிய உணவு என்பது கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு உரியது. ஆதரவற்றோர்களை ஆதரவற்றோர் இல்லத்தில் தான் வைத்து பராமரிக்க வேண்டும். அதற்காக அங்கன்வாடிகள், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத்திட்டத்தில் இல்லங்கள் போன்ற இடங்களில் வைத்து பாதுகாக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மறுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago