எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்16 - உடல் நிலை குறைவு காரணமாக, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் குணமடைந்து இருப்பிடம் திரும்பினார். அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இது குறித்த விபரம் வருமாறு:-
நடிகர் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்கும் ``ராணா'' படத்தினை, ஈராஸ் என்ற மும்பை நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.
ராணா படத்தின் துவக்க விழா சென்னையில் கடந்த ஏப்.29-ந் தேதி ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நடைபெற்றது. நடிகர் ரஜினி நடிக்கும் காட்சி படமாக்கப்படும்போது, அவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டதால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு, அவர் உடனடியாக மைலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வீடு திரும்பினார்.
ஓய்விலிருந்த அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்படவே அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த மே.13-ந் தேதி அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரது சிறுநீரக செயல்பாடு குறைந்துள்ளதால் டயாலிஸ் சிகிச்சை செய்யப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த மே. மாதம் 18-ந் தேதி இரவு மீண்டும் ரஜினிக்கு உடல்நிலை கவலைக்கிடமானதாக கூறப்பட்டது.
இந்நிலையில் ரஜினியை அமெரிக்கா உட்பட வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை செய்ய இருப்பதாக செய்திகள் பரவின. இதற்கிடையில் ரஜினி குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிராத்தனைகள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
முதல்வர் ஜெயலலிதா லதா ரஜினிகாந்திடம் ரஜினி உடல்நிலை குறித்து தொலைபேசியில் நலன் விசாரித்து அவர் குணமடைய வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த ஏப.21-ந் தேதி தனிவிமானம் மூலம் ரஜினி சிங்கப்பூருக்கு சிகிச்சைபெற சென்றார். அவருடன் அவரது மனைவி லதாரஜினி, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன் தனுஷ் உட்பட உறவினர்கள் உடன் சென்றனர்.
சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஜினி குணம் அடைந்து வருவதாக அங்கிருந்து வந்த செய்திகள் தெரிவித்தன. இந்நிலையில் நடிகர் ரஜினி முற்றிலும் குணம் அடைந்து நேற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருப்பிடம் திரும்பினார். அவர் இருப்பிடம் திரும்பியவுடன் முதன்முதலில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசினார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிங்கப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், சிங்கப்பூரிலிருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது ரஜினிகாந்த், தான் தற்போது சிங்கப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சை முடித்து, தனது இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளதாகவும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்தவுடன் தமிழக முதல்வருடன் தான் முதலில் பேச வேண்டும் என்று முடிவு செய்து, தமிழக முதல்வர் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, ரஜினிகாந்தின் குரலை தொலைபேசியில் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகத் தெரிவித்து, அவர் குணமடைந்தது குறித்து தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதாகவும், அவர் விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் தெரிவித்துக் கொண்டார்கள்.
ரஜினிகாந்த், முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டமைக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, தான் இன்னும் ஒன்றரை மாதங்களல் இந்தியா திரும்ப இருப்பதாக தெரிவித்தார்.
லதா ரஜினிகாந்த், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சென்னையில் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தமிழக முதல்வர் நலம் விசாரித்ததை நினைவுகூர்ந்து தமிழக முதல்வருக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
ஆசிய இளையோர் கபடி இறுதிப்போட்டி: ஈரான் அணியை வீழ்த்திய இந்திய ஆடவர்-மகளிர் அணிக்கு தங்கம்
24 Oct 2025மனாமா: ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 தற்போது பஹ்ரைனில் மனாமா நடைபெற்று வருகிறது.
-
மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா
24 Oct 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை போட்டி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
-
நினைவுகூர்ந்த திலக் வர்மா
24 Oct 2025ஆசியக் கோப்பை தொடர்பாக அன்றைய இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட திலக் வர்மா, தற்போது அதுகுறித்த புதிய விவரங்களை வெளியிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-10-2025.
25 Oct 2025 -
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: ஆஸ்திரேலிய அணியில் மாற்றம்
24 Oct 2025மெல்பார்ன்: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பல மாற்றங்கள்...
-
ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ‘யாத்ரி சுவிதா கேந்திரா' என்ற சிறப்பு திட்டம் விரைவில் அமல்
25 Oct 2025சென்னை: ரயில்நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு திட்டம் தொடங்கப்பட உள்ளது.
-
அசாமில் மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொலை
25 Oct 2025கவுகாத்தி: சாம் என்கவுன்டரில் மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
தமிழகம் முழுவதும் 407 முகாம்கள் மூலம் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 6,37,089 பேர் பயன்பெற்றுள்ளனர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
25 Oct 2025சென்னை: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட 407 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்கள் மூலம் 6,37,089 பேர் பயன்பெற்றுள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறன் சான்று 2
-
சென்னையில் இருந்து 970 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்
25 Oct 2025சென்னை: புயல் சின்னம் 7 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் இருந்து 970 கி.மீ.
-
திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி., எஸ்.பி. நேரில ஆய்வு
25 Oct 2025திருச்செந்தூர்: ருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடு பணிகளை டி.ஐ.ஜி., எஸ்.பி. ஆய்வு செய்தார்.
-
திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை: நிர்வாகம்
25 Oct 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது.
-
வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு அணை: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
25 Oct 2025நெல்லை: கொடுமுடியாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
மோன்தா புயல் எதிரொலி: தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
25 Oct 2025சென்னை: புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறித்தியுள்ளது.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம்: புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி
25 Oct 2025கர்னூல்: ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
-
அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி மேலும் தீவிரம்
25 Oct 2025சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தினை அமல்படுத்தும் பணியை விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகள் மேலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
திருநெல்வேலியில் ரூ. 17.82 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்பு
25 Oct 2025திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் நேரடி கண்காணிப்பில், சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி.
-
ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூர் இளைஞர் பலி
25 Oct 2025தெலுங்கானா: ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூரை சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார்.
-
சிறையில் கைதியுடன் உல்லாசம்: இங்கிலாந்தில் பெண் அதிகாரிகள் சிக்கினார்
25 Oct 2025லண்டன்,: சிறையில் கைதிகளிடம் உல்லாசமாக இருந்த பெண் அதிகாரி சிக்கினார்.
-
நீதிபதி குறித்து அவதூறு வழக்கில் ஜாமீன் கோரிய ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மனு மீது பதிலளிக்க உத்தரவு
25 Oct 2025சென்னை: நீதிபதி அவதூறு வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ.4-ல் வெளியீடு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
25 Oct 2025சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை அடுத்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
-
குஜராத்திற்கு வழங்கியதை பீகாருக்கு வழங்கவில்லை பிரதமர் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு
25 Oct 2025பாட்னா: பிரதமர் மோடி குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு பீகாரில் வெற்றியை தேடுவதா? என்று தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டினார்.
-
மோன்தா புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
25 Oct 2025சென்னை: மோன்தா புயலால் தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
-
பயணிகள் முன்பதிவு குறைவு எதிரொலி: 6 சிறப்பு ரயில்கள் ரத்து
25 Oct 2025சென்னை: பயணிகள் முன்பதிவு குறைவு 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
தேவர் ஜெயந்தி- குருபூஜை முன்னிட்டு ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்
25 Oct 2025ராமநாதபுரம்: தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு மூடப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி: தங்க கட்டிகளை மறைத்து விமானத்தில் கடத்திய பெண் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் 6 தங்க கட்டிகளை உள்ளாடையில் மறைத்து விமானத்தில் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.


