முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2025      இந்தியா
Prashant-Kishore 2024-11-02

Source: provided

கோபால்கஞ்ச்: பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு தெரிவித்தார்.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து பிரசாரம் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், ஜன் சுராஜ் கட்சி சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த 3 பேர், கடைசி நேரத்தில் வேட்புமனுவை திரும்பப் பெற்றுவிட்டு பாஜகவில் இணைந்தனர். இதன்படி கஞ்ச் தொகுதியில் பிரசாத் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி சார்பில் சசி சேகர் சின்கா களமிறக்கப்பட்டார். ஆனால் அவர் தனது வேட்புமனுவை திரும்பப்பெற்றார். இதற்கு பா.ஜனதாவின் அழுத்தமே காரணம் என குற்றம் சாட்டிய பிரசாந்த் கிஷோர், அந்த தொகுதியில் பா.ஜனதா போட்டி வேட்பாளரான அனூப் குமார் ஸ்ரீவத்சவாவை கட்சி ஆதரிக்கும் என அறிவித்து உள்ளார்.

மாவட்ட பா.ஜனதா முன்னாள் தலைவரான அவருக்கு கட்சி மேலிடம் சீட் வழங்கவில்லை. எனவே அவர் சுயேச்சையாக அந்த தொகுதியில் களமிறங்குகிறார். கோபால்கஞ்ச் தொகுதியில் நன்கு அறியப்பட்ட சமூக சேவகரான அவரை ஆதரிப்பதாக பிரசாந்த் கிஷோர் நேற்று முன்தினம் தெரிவித்தார். அவரும், தனது கட்சியும் பா.ஜனதாவின் அநீதியால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறிய அவர், அவரை ஆதரிப்பதன் மூலம் பா.ஜனதாவின் மருந்தை அவர்களுக்கே கொடுக்க இருப்பதாகவும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து