முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவின் அனைத்து எண்ணெய் நிறுவனங்கள் மீது தடை விதிக்க அமெரிக்காவுக்கு உக்ரைன் அதிபர் கோரிக்கை

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2025      உலகம்
Jelensky 2024 08 19

Source: provided

ரஷ்யா: ரஷ்யாவின் அனைத்து எண்ணெய் நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ‘ரோஸ்நெஃப்ட்’ மற்றும் ‘லுகோயில்’ மீது அமெரிக்கா கடந்த 22-ஆம் தேதி பொருளாதார தடை விதித்தது. இதன்மூலம் இந்நிறுவனங்களுடன் அமெரிக்காவைச் சோ்ந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள் வணிகம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அமெரிக்கா அல்லாத நிறுவனங்களும் மேற்கூறிய ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்களுடன் வணிகம் மேற்கொண்டால் அவற்றுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ள அமெரிக்கா, இந்த நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வணிகத்தை நவ. 21-ஆம் தேதிக்குள் நிறுத்திவிட வேண்டும் என அமெரிக்க நிதியமைச்சகம் தெரிவித்தது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வருவதால் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யாவின் இந்த 2 நிறுவனங்கள் மட்டுமில்லாது, அந்த நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் மற்ற எண்ணெய் நிறுவனங்களுக்கும் நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ரஷ்யாவுடன் போரை நிறுத்தினால் உக்ரைன் நாட்டின் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்பது தொடர்பாக ஐரோப்பிய தலைவர்களும் ஆலோசனை மேற்கொள்ள அவர் லண்டன் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா அழைத்ததன்பேரில் புதினின் உதவியாளர் கிரில் டிமிட்ரிவ் அமெரிக்காவில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து