முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுடன் அணு ஒத்துழைப்பு: பிரான்ஸ் உறுதி

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை 2 - இந்தியாவுக்கு ஆக்கப்பூர்வ அணுசக்தி ஒத்துழைப்பை தங்கள் நாடு வழங்கும் என்று பிரான்ஸ் மீண்டும் உறுதி செய்துள்ளது. ஆக்கப்பூர்வ அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையே கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 தேதி உடன்பாடு கையெழுத்தானது. இந்த உடன்பாட்டின்படி மகாராஷ்ட்ராவில் அணு மின் நிலையம் ஒன்றை அமைக்க பிரான்ஸ் முன்வந்துள்ளது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் ஜெரோமி போனோபான்ட் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்தியாவுக்கு அணுசக்தி ஒத்துழைப்பை வழங்கலாம் என்று அணுசக்தி சப்ளையர்கள் குழுவுக்கு ஏற்கனவே சர்வதேச அணுசக்தி முகமை அனுமதி அளித்துள்ளது. அதன்படி இந்தியாவில் அணு மின் நிலையங்கள் அமைக்க தேவையான உதவிகளை அளிக்க பிரான்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஆக்கப்பூர்வ அணுசக்தி ஒத்துழைப்பு தொடரும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

சமீபத்தில் அணுசக்தி சப்ளையர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வழங்குவது தொடர்பாக சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த கட்டுப்பாடுகளை பிரான்ஸ் பின்பற்றும். கடந்த 2010 ஆம் ஆண்டு பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி இந்தியாவுக்கு வந்திருந்தபோது பன்முக ஏற்றுமதி கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பதற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார் என்றும் அந்த அறிக்கையில் பிரான்ஸ் தூதர் கூறியிருக்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்