முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரப்ஜித் சிங் வழக்கை மீண்டும் விசாரிக்க கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

லாகூர். ஜூலை. 3  - பாகிஸ்தானில் மரண தண்டனை பெற்று சிறையில் வாடும் சரப்ஜித் சிங் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று அவரது சகோதரி வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தானில் நடந்த ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறி சரப்ஜித் சிங் என்ற இந்தியரை பாகிஸ்தான் கோர்ட்டு குற்றவாளி என தீர்மானித்து அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. 

சரப்ஜித் சிங் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் சிறை வாசம் அனுபவித்து வருகிறார்.

அவரது மரண தண்டனையை மறு பரிசீலனை செய்யுமாறு இநதிய அரசும் பல முறை பாகிஸ்தான் அரசை கேட்டுக்கொண்டது. ஆனாலும் கூட அவரது மரண தண்டனை மறுபரிசீலனை செய்யப்படவில்லை.

இந்த நிலையில் தனது சகோதரரை நேரில் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு அவரது சகோதரி தல்பீர்கவுர் அனுமதி கேட்டிருந்தார். இதற்கு  பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது. இதை அடுத்து கவுர் நேற்று பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகருக்கு கடந்த மாதம் 6 ம் தேதி சென்றார். அங்கு கோட் லக்பாட் என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது சகோதரரை பார்த்தார்.

பிறகு அவர் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பினார்.

இந்தியா திரும்புவதற்கு முன்பாக அவர் லாகூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் தனது சகோதரர் ஒரு அப்பாவி என்றும் அவர் மீதான வழக்கை பாகிஸ்தான் குழு ஒன்று பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் விசாரணை நடத்தி  அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பாகிஸ்தானில் குண்டு வைத்த ஒரிஜினல் குற்றவாளி மஞ்சித்சிங் இந்தி ஆயவில் கைது செய்யப்பட்டு இருக்கிறான் என்றும் தனது சகோதரருக்கும் பாகிஸ்தான் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.

தனது கிராமத்தில் உள்ள அனைவருக்கும் இந்த உண்மை தெரியும் என்றும் தது சகோதரரை பாகிஸ்தான் அரசு விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்