முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெளரா-டெல்லி ரயில் தடம்புரண்டு 50 பேர் படுகாயம்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

பதேபூர், ஜூலை - 11 - ஹெளராவில் இருந்து டெல்லி வழியாக கல்கா நகருக்கு சென்றுகொண்டிருந்த ரயில் உத்தரபிரதேசத்தில் தடம்புரண்டது. இதில் 50 பேர் படுகாயம் அடைந்தனர். மேற்குவங்க மாநிலம் ஹெளராவில் இருந்து டெல்லி வழியாக கல்கா என்ற நகருக்கு மெயில் வண்டி ஒன்று சென்றுகொண்டு இருந்தது. இந்த ரயில் உத்தரபிரதேச மாநிலம் பதேபூருக்கு அருகில் உள்ள மால்வா ரயில் நிலையத்திற்கு அருகே திடீரென தடம்புரண்டது. இதில் 11 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகிச் சென்றன. இந்த சம்பவத்தில் 50 பேர் படுகாயம் அடைந்ததாக பதேபூர் மாவட்ட அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக மீட்பு குழுவினர் மற்றும் மருத்துவ குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அதே இடத்தில் முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள், விபத்து குறித்து விசாரணை நடத்தினர். அந்த ரயில்வே பாதையில் சில மணி நேரத்திற்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த ரயிலில் வந்த பயணிகள் அனைவரும் மாற்று ரயில் பெட்டிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். தடம்புரண்ட ரயில்பெட்டிகளை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!