முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் அவையிலிருந்து 7 மந்திரிகளுக்கு கல்தா

புதன்கிழமை, 13 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை 13 - பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 7 அமைச்சர்களுக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் சரியாக செயல்படாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. மத்திய ஜவுளித்துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கியுள்ளதால் அவருக்கு ஏற்கனவே கல்தா கொடுக்கப்பட்டு அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். நேற்று மேலும் 6 அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். முரளிதியோரா (கம்பெனிகள் விவகாரம்), பி.கே.ஹாண்டிக்(வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித் துறை), எம்.எஸ்.கில்(புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க துறை), காந்திலால் பூரியா(பழங்குடியினர் விவகாரத்துறை), ஏ.சாய்பிரதாப்(கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை), அருண் எஸ்.யாதவ் (உணவு பதப்படுத்துதல் தொழில்துறை) ஆகியோரும் தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மேற்கண்ட 7 அமைச்சர்களின் செயல்பாடுகள் சரியில்லாததால் இவர்களுக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 7 அமைச்சர்களின் ராஜினாமாக்களையும் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஏற்றுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்