முக்கிய செய்திகள்

3-வது வழக்கில் சக்சேனாவிற்கு போலீஸ் கஸ்டடி

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      வர்த்தகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை, 21 - சன் பிக்சர்ஸ் சக்சேனாவிற்கு மூன்றாவது முறையாக 27 மணி நேர போலீஸ் காவலுக்கு நீதிமன்றம் அனுமதித்துள்ளது. சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது பண மோசடி மிரட்டல் புகார்கள் தொடர்ந்து போலீசாருக்கு வந்த வண்ணம் உள்ளது. இதுவரை 5 படத் தயாரிப்பாளர்கள் புகாரின் பேரில் போலீசார்  சக்சேனா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கே.கே.நகர் போலீசில் இரண்டு புகார்களும், கோடம்பாக்கம், விருகம்பாக்கம், நுங்கம்பாக்கம் போலீசில் தலா ஒரு புகாரும் பதிவு செய்யப்பட்டு வழக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை கே.கே.நகர் முதல் வழக்கில் இரண்டு நாள் போலீஸ் காவலும், கோடம்பாக்கம் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் இரண்டு நாள் போலீஸ் காவலும் சைதாப்பேட்டை நீதிமன்றம் வழங்கி உள்ளது. 

இதனிடையே வல்லக்கோட்டை படத் தயாரிப்பாளர் விருகம்பாக்கம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் சைதாப்பேட்டை 23 வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதன் பேரில் சக்சேனாவை 27 மணி நேரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதி அளித்துள்ளார். இதன் மூலம் மூன்று முறை போலீசார் சக்சேனாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: