முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடித்து 23 பேர் உடல் சிதறி பரிதாப பலி

சனிக்கிழமை, 30 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

காபூல், ஜூலை - 30 - ஆப்கானிஸ்தானில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்ததில் 23 அப்பாவி மக்கள் உடல் சிதறி பலியானார்கள். ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்டு மாகாணத்தில் உள்ள நகார் இ சராஜ் என்ற  இடத்தில் இருந்து லஸ்கர் கா என்ற இடத்திற்கு மினி பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த நில வெடி குண்டு வெடித்ததில் அந்த பஸ்சில் பயணம் செய்த 19 பேரும் உடல் சிதறி பரிதாபமாக பலியானார்கள். அந்த பஸ் தூக்கியெறியப்பட்டு சின்னாபின்னமாக சிதறி விழுந்தது. இந்த தகவலை ஹெல்மாண்டு மாகாண பாதுகாப்பு இயக்குனர் ஹமாலுதீன் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்றபோது அவர்கள் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதேபோல கர்சிர் மாவட்டத்தில் ஒரு டிராக்டர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலக் கண்ணிவெடி வெடித்து 4 பேர் உடல் சிதறி பலியானார்கள். இதுகுறித்து ஆப்கானிஸ்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலக் கண்ணிவெடிகளை சாலையோரம் பதுக்கி வைத்தது யார் என்று அவர்கள் புலன் விசாரணை நடத்திவருகிறார்கள். இந்த கண்ணிவெடி தாக்குதலை தலிபான் தீவிரவாதிகள்தான் நடத்தியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மினி பஸ் வெடித்துச் சிதறிய இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 போலீசார் கொல்லப்பட்டனர் என்றும் ஆப்கன் போலீசார் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படையினருக்கு எதிராக இதுபோன்ற தாக்குதல்களை தலிபான் தீவிரவாதிகள் நடத்தி வருகின்றனர். ஆனால் இதுபோன்ற தாக்குதல்களில் அப்பாவி மக்கள்தான் அதிகம்பேர் கொல்லப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்