முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உழவர் பாதுகாப்பு திட்டம் மீண்டும் அமல் - புதிய சட்டம் தாக்கல்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஆக.19 -  உழவர் பாதுகாப்பு திட்டம் மீண்டும் அமல் படுத்த சட்டசபையில் புதிய சட்ட திருத்தம் கொண்டுவரபப்படுகிறது என்று வருவாய்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். 2011ம் ஆண்டு தமிழ்நாடு விவசாயத்தொழிலாளர்கள் - விவசாயிகள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நகல்) நீக்கச் சட்டமுன்வடிவு தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. வருவாய்த்துறை அமைச்சர் பி.தங்கமணி இதனை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

2006-ம் ஆண்டு தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 29/2009) இணைப்பு பட்டியலிலேயே பயனாளிகமள் பெற வேண்டிய உதவித் தொகையின் அளவானது குறித்துரைக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில்,உதவித் தொகையின் அளவானது மாற்றம் செய்யப்பட வேண்டும் எனும்போதொல்லாம் திருத்தமொன்று தேவையாகிறது, அதுவே நடைமுறையைச் சிக்கலானதாகவும் இடைஞ்சல் நிறைந்ததாகவும் ஆக்குகிறது. 

மேலும் மேற்சொன்ன 29/2006 எனும் எண்ணிட்ட தமிழ்நாடு சட்டத்தின் 7-ம் பிரிவின்படி, விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் நலவாரியமானது நலத்திட்டத்தினை நிர்வகிப்பதற்கு பொறுப்பானதாகும். மேலும் அந்த வாரியமானது அந்த செயல் திட்டத்தின் மூலம் அதற்கு வழங்கப்படக்கூடிய அத்தகைய அதிகாரங்களை செலுத்துதலும், அத்தகைய அலுவல்களை ஆற்றதலும் வேண்டும். ஆனால், விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள்  நலத்திற்கான செயற்திட்டமானது வருவாயத்துறை அலுவலர்களால் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. 

எனவே நலத்திற்கான செயற்திட்டத்தைச் செயல்படுத்துவதில் வாரியத்தின் பங்கானது மிகவும் குறைவானதாக இருக்கிறது. மேற்சொன்ன சட்டத்தின் கீழ் வாரியத்தை அமைத்துருவாக்குவதும் மற்றும் அதன் அலுவல் சாரா உறுப்பினர்களை நியமிப்பதும் அரசுக்கு கூடுதல் செலவினமாக அமைகிறது. 2005-ம் ஆண்டில் தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டமானது நலவாரியம் ஒன்றை அமைத்துருவாக்காமலேயே செயற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உழவர் பாதுகாப்புத் திட்டமானது தற்கால சூழலுக்கு ஏற்றாற்போல் சீரமைக்கப்பட்டு விவசாயத் தொழிலாளர்கள், குறு மற்றும் சிறு விவசாயிகள் மற்றும் அவர்தமம் குடும்பங்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை வழங்குவதன் மூலம், அவர்தம் வாழ்வில் எதிர்கொள்ளும் இடர்வரவிலிருந்தும், நிச்சயமற்ற தன்மையில் இருந்தும் பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்கு நிதியுதவிகள் வழங்கும் வகையில் நடைமுறைப்படுத்துவதெனக் கருதப்பட்டுள்ளது.

எனவே அரசானது மேற்சொன்ன 29/2006 எனும் எண்ணிட்ட தமிழ்நாடு சட்டத்தை நீக்கம் செய்வதென முடிவு செய்துள்ளது. இச்சட்டமுன்வடிவு மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.இவ்வாறு அந்த சட்ட முன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை ஆரம்பத்திலேயே எதிர்பாதகாக மர்க்கசிஸ்ட்,இந்தியகம்யூனிஸ்ட், புதிய தமிழகம் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony