முக்கிய செய்திகள்

ரஷ்யா அனுப்பிய விண்கலம் வெடித்து சிதறியது

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, ஆக.26 - சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட ரஷ்ய விண்கலம் எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 விஞ்ஞானிகள் உள்ளனர். இவர்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை தேவையான பொருட்கள், எரிபொருள், ஆக்ஸிஜன் போன்ற பொருட்கள் பூமியில் இருந்து கொண்டுசெல்லப்படுகின்றன. இதற்காக ரஷ்யா விண்கலங்களை இயக்கி வருகிறது. 1978 ம் ஆண்டுமுதல் ரஷ்யா இப்பணியை சிறப்பாக செய்துவருகிறது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் எம் - 12 எம் எனும் ஆளில்லாத விண்கலம் ஒன்று ரஷ்யாவின் கஜகஸ்தான் மாநிலத்தில் உள்ள பைகானூர் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த விண்கலத்தில் பல டன் எடையுள்ள பொருட்கள் இருந்தன. விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் அதற்கான நீள்வட்ட பாதையில் நிலை நிறுத்தப்படுவதற்கு முன்பு பூமியை நோக்கி திரும்பியது. இதனால் சிறிது நேரத்தில் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவம் ரஷ்ய விஞ்ஞானிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: