முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

16 முறை ஆந்திராவில் நிதி மந்திரியாக இருந்த கவர்னர் ரோசய்யா

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், செப்.- 1 - விவசாய குடும்பத்தில் பிறந்த ரோசய்யா ஆந்திராவில் நிதி மந்திரியாக இருந்து 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் ஆவார். தமிழக கவர்னராக பொறுப்பேற்றிருக்கும் ரோசய்யாவுக்கு வயது 78. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் வேமுரு என்ற கிராமத்தில் 4.7.1033 ல் பிறந்தவர். இவரது தந்தையார் பெயர் சுப்பையா. ரோசய்யா குண்டூரில் உள்ள இந்து கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். 1952ல் கல்லூரி மாணவர் சங்க பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவே அவரது அரசியல் பயணத்திற்கு முதல்படியாகும். 1968ல் எம்.எல்.சி ஆனார். தொடர்ந்து 1974,80ல் மீண்டும் எம்.எல்.சி. யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். 1980ல் சென்னாரெட்டி மந்திரி சபையில் கலை மற்றும் கட்டிடங்கள் துறை மந்திரியாக இருந்தார். தொடர்ந்து அஞ்சையா மந்திரி சபையில் வாட்டு வசதி மந்திரியானார்.1983ம் ஆண்டு வரை விஜயபாஸ்கர் ரெட்டி மந்திரி சபையில் உள்துறை மந்திரியாக பொறுப்பு வகித்தார். பின்னர் சென்னா ரெட்டி  மாண்டும் முதல்வரானதும் அவரது மந்திரி சபையில் நிதியமைச்சராக பதவி வகித்தார். மீண்டும் விஜயபாஸ்கர் ரெட்டி மந்திரி சபையில் 1992 முதல் 94 வரை மீண்டும் நிதிமந்திரியாகவே தொடர்ந்தார். 1995 முதல் 1997 வரை ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தார். 1998 ல் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பி. ஆகி பாராளுமன்றம் சென்றார். 2004 முதல் 2009 வரை ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி மந்திரி சபையில் நிதிமந்திரியாக இருந்தார். அவர் நிதிமந்திரியாக இருந்த காலத்தில் 16 முறை மாநில பட்ஜெட்டுகளை தாக்கல் செய்து சாதனை படைத்தவர். விசாகப்பட்டிணத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழகம் அவருக்கு 2007 ம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கியது. ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்ததை தொடர்ந்து 2009 செப்டம்பர் முதல் 2010 நவம்பர் வரை முதல்வராக இருந்தார். தற்போது தமிழக கவர்னராக நியமித்த பிறகு தனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்