முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.வங்க முதல்வர் மம்தாவுடன் சிவசங்கரமேனன் ஆலோசனை

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, செப்.- 1 -  பிரதமர் மன்மோகன் சிங்கின் வங்கதேச சுற்றுப்பயணம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். வங்கதேச பிரதமர் ஷேக்ஹசீனாவின் அழைப்பை ஏற்று பிரதமர் மன்மோகன்சிங் வருகிற 6,7 ஆகிய தேதிகளில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பிரதமரின் இந்த பயணத்தின்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி மற்றும் திரிபுரா,மேகாலாயா முதல்வர்களும் உடன் செல்ல இருக்கின்றனர்.வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வங்காள தேச மண்ணில் இருந்துகொண்டு தங்களது வன்முறைச் செயல்களை இந்தியாவில்  நிகழ்த்தி வருவதாக  கூறப்படுகிறது. குறிப்பாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட்டுகள் வங்காள தேசத்தில்தான் பயிற்சி பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. பிரதமரின் இந்த பயணத்திற்கு முன்பாக நேற்று கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பேனர்ஜியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். மேற்குவங்க தலைமை செயலாளர் சமர்கோசுடனும் தலைமைச் செயலகத்தில் மேனன் ஆலோசனை நடத்தினார். வங்காளதேசத்திற்கும் மேற்கு வங்காளத்திற்கும் இடையே ரயில் போக்குவரத்து பிரச்சனை குறித்து மம்தாவிடம் மேனன் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
வங்காளதேசத்திற்கு செல்லும் பிரதமர் மன்மோகன்சிங் அங்கு இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனை, நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனை போன்ற நீண்டகால பிரச்சனைகள் குறித்து அந்நாட்டு தலைவர்களுடன் விவாதிப்பார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்