முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாள் முன்னாள் பிரதமர் மறைவு

திங்கட்கிழமை, 7 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

காத்மண்டு,மார்ச்.-  7- நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் கிருஷ்ண பிரசாத்(87) காத்மண்டுவில் காலமானார்.  நோய்வாய்ப்பட்டிருந்த அவர் 3 வாரங்களுக்கு முன்னால் காத்மண்டுவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர் பரத் ராவத் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இநத நிலையில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

அவர் உடல் நிலை மோசமானதை தொடர்ந்து நேபாள அதிபர் ராம் பரண்யாதவ் மருத்துவமனைக்கு வந்து அவரை பார்த்து விட்டு சென்றார். 

கடந்த 1990 ம் ஆண்டில் நேபாள நாட்டின் அரசமைப்பு சட்டத்தை இயற்றியதில் முக்கிய பங்கு வகித்தவர் கிருஷ்ணபிரசாத். நேபாள காங்கிரஸ் கட்சியை நிர்மாணித்தவரும் அவரே. பல்வேறு பிரச்சினைகள் காரணமாக கடந்த 12 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 1990 ல் மக்கள் இயக்கம் தோன்றி வெற்றி பெற்ற போது நாட்டின் இடைக்கால பிரதமராக கிருஷ்ணபிரசாத் பதவி வகித்தார். இந்த காலக்கட்டத்தில்தான் அரச பரம்பரை ஆட்சியில் இருந்து ஜனநாயக ஆட்சி நேபாளத்தில் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago