முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லைமாவட்ட துணைமேயர் தாயார் மரணம் -ஜெயலலிதா இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.- 31 - நெல்லை மாநகர் துணைமேயரின் தாயார் மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு: திருநெல்வேலி மாநகர் மாவட்டம் 7-வது வட்ட கழக செயலாளரும் மாநகராட்சி துணை மேயர் பி.கணேசன் (எ)ஜெகநாதனின் தாயார் சங்கரம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் மடைந்து விட்டார். என்ற செய்திகேட்டு வருந்துகிறேன். தாயாரை இழந்து வாடும் அன்பு சகோதரர் கணேசன் (எ) ஜெகநாதனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன். மரணம் அடைந்தோரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் நிம்மதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony