முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குண்டு வெடித்ததில் ஆப்கனில் 3 பேர் பலி

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

ஜலாலாபாத், நவ. - 24 - ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள ஜலாலாபாத் நகரில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 3 பேர் பலியானார்கள்.  இவர்கள் பயணம் செய்த வாகனம் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு மீது ஏறி இறங்கியதில் வாகனம் பலத்த சேதமடைந்தது. இதில் பயணம் செய்த மற்ற 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. லோஹ்மான் மாகாணத்தில் அலிஞர் மாவட்டத்தில் உள்ள ஒரு பாலத்திற்கு கீழ் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்ததாக அப்பகுதி போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.  இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஆப்கனின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழப்பு 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆறு மாதங்களில் 1,462 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 80 சதவீத தாக்குதலை ஊடுருவல்காரர்கள் நிகழ்த்தியுள்ளனர். சுமார் 1.40 லட்சம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த கூட்டுப் படை வீரர்கள் ஆப்கனில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago