முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினி நடிக்கும் `கோச்சடையான்'

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, நவ.26 - ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் `கோச்சடையான்'.  இதுகுறித்து ரஜினிகாந்த் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- ரஜினிகாந்த் நடிக்கும் `ராணா' திரைப்படத்திற்கு முன்பு ஒரு புதிய பரிணாமத்தில் அவர் நடிக்கவிருக்கும் 3 டி படம் `கோச்சடையான்'. இது இந்தியாவில் தயாராகும், நடிப்பை பதிவிறக்கம் செய்யும் முதல் 3 டி படம் என்பது பெருமைக்குரியது. உலகத்திலேயே அதிக வசூலை வாரிக்குவித்த, ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் `அவதார்', மற்றும் தற்போது உலகெங்கிலும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் இயக்கிய திரைப்படம் `டின் டின்' ஆகிய படங்கள் இதே புதிய தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ஷன் மேற்பார்வையை கே.எஸ்.ரவிகுமார் ஏற்றுள்ளார். இப்படத்தை ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மென்ட்நிறுவனத்தினர் தயாரிக்கின்றனர். இப்படத்தின் இயக்கத்தை ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா அஸ்வின் ஏற்றுள்ளார். ஆகஸ்ட் 2012-ல் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கி துரிதமாக நடைபெறவுள்ளது. கோச்சடையானை தொடர்ந்து ரஜினிகாந்த் `ராணா' திரைப்படத்தில் நடிப்பார் என ஈராஸ் நிறுவனமும், சவுந்தர்யா அஸ்வினும், ரஜினிகாந்த் சார்பாக தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago