முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யூரோ மதிப்பு சரிவு - ஐரோப்பிய நிதி மேலும் மோசம்

செவ்வாய்க்கிழமை, 13 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

லண்டன், டிச.13 - ஐரோப்பாவில் நிலவும் நிதி தட்டுப்பாடு, கடன் நெருக்கடியை சமாளிக்க யூரோ கூட்டமைப்பு நாடுகள் உடனடி தீர்வு எதையும் சொல்லாததையடுத்து யூரோ கரன்சியின் மதிப்பு சரிந்துள்ளது. டாலருக்கு நிகரான ஒரு யூரோவின் மதிப்பு 0.4 சதவீதம் அளவுக்கு குறைந்து 1.33 சதவீதமானது. மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 10 சதவீத சரிவாகும். 

யூரோ மண்டல பொருளாதார நெருக்கடிக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் இரு நாட்களுக்கு முன் ஆலோசனை நடத்தினர். அதில் நிதி தட்டுப்பாடு, கடன் நெருக்கடியை சமாளிக்க தத்தமது நாடுகளின் வரி விதிப்பிலும், வரவு செலவு திட்டத்திலும் மாற்றங்களை செய்ய அந்த நாடுகள் ஒப்புக் கொண்டன. 

மேலும் மிகவும் சிக்கலில் உள்ள நாடுகளுக்கு உதவ சர்வதேச பொருளாதார நிதியத்துக்கு பில்லியன் டாலர் அளவுக்கு நிதி வழங்குவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இதை பிரிட்டன் ஏற்கவில்லை. மேலும் இக்கூட்டத்தில் ஐரோப்பிய கடன் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு ஏதும் எட்டப்படவும் இல்லை. கடும் நிதி தட்டுப்பாட்டில் உள்ள ஐரோப்பிய வங்கிகளுக்கு உதவும் திட்டமும் முன் வைக்கப்படவில்லை. இதையடுத்து நேற்று ஆசிய பங்கு சந்தைகளில் யூரோ கரன்சியின் மதிப்பு சரிந்தது. அமெரிக்க பங்கு சந்தையிலும் இது எதிரொலிக்கும் என்று தெரிகிறது. மேலும் ஐரோப்பாவில் நிலைமை மேலும் மோசமாகும் என்றும், யூரோவின் மதிப்பு தொடர்ந்து சரியும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்