முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் அமைப்பு சுதந்திரமாக செயல்படும்படி இருக்கவேண்டும்-ஹசாரே

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,டிச.- 26 - லோக்பால் அமைப்பானது குற்றஞ்சாட்டப்பட்டவர்களை சுதந்திரமாக விசாரணை நடத்தும் ஒரு அமைப்பாக இருக்க வேண்டும் என்று அண்ணா ஹசாரே வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன்சங் மற்றும் எம்.பி.க்களுக்கு அண்ணா ஹசாரே தனித்தனியாக எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது பொதுமக்கள் கூறும் குற்றச்சாட்டுக்களை சுயமான விசாரணை நடத்தும் ஒரு அமைப்பாக லோக்பால் அமைப்புகள் இருக்க வேண்டும். அதற்குத்தகுந்தவாறு சட்டவிதிகளை உருவாக்க வேண்டும். கடந்த ஓராண்டு காலமாக ஊழலுக்கு எதிராக நடத்தி வந்த போராட்டத்தால் ஊழலை ஒழிக்க லோக்பால் அமைப்பை கொண்டு வர வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்துள்ளனர். அதனால் லோக்பால் அமைப்பானது ஊழலை திறம்பட விசாரணை நடத்தும் ஒரு சக்திவாய்ந்த அமைப்பாக இருக்க வேண்டும். நாட்டு மக்களின் மனநிலையை உணர்ந்துள்ள பாராளுமன்ற எம்.பி.க்கள், லோக்பால் மசோதா மீது விரிவான விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக எனது நன்றியை மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன். பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் நடத்தும் விவாதத்தால் லோக்பால் மசோதாவில் சக்திவாய்ந்த பிரிவுகளை சேர்க்க வகை செய்ய வேண்டும். ஊழலுக்கு எதிரான வலுவான சட்டத்தை பாராளுமன்றம் தர வேண்டும். லோக்பால் மசோதாவில் உள்ள குறைபாடுகளை போக்க வரும் நாட்களில் தொடர்ந்து போராட்டம் நடக்கும். யாரிடம் புகார் வராத நிலையிலும் லோக்பால் அமைப்பும் லோக் ஆயுக்தாவும் விசாரணையை தொடங்கும் சுயாட்சி அமைப்புகளாக செயல்பட வேண்டும். லோக்பாலில் சி.பி.ஐ.யின் ஊழல் எதிர்ப்பு பிரிவு சேர்க்கப்பட வேண்டும். மாநில ஊழல் ஒழிப்பு பிரிவு லோக்பால் அமைப்பிலோ அல்லது லோக் ஆயுக்தா அமைப்பின் வரம்பிற்குள் கொண்டுவரப்பட வேண்டும். இந்த இரண்டு அமைப்புகளும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சுய அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ஹசாரே கூறியுள்ளார்.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்