முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட மாநிலங்களில் பனிப்பொழிவு: போக்குவரத்து பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.30 - வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவுடன் குளிர்காற்று வீசி வருவதால் அங்கு ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் பனிப்பொழிவுடன் குளிர் காற்று வீசி வருவதால் பல பகுதிகளில் வெப்ப நிலை உறைநிலைக்கும் கீழே சென்றுவிட்டது. டெல்லி, காஷ்மீர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்கலில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் அங்கு காலையில் சூரியனை பார்ப்பது மிக அரிதாக உள்ளது. டெல்லியில் பகலில் வெப்பநிலை 4.1 டிகிரியாகவும் இரவில் இதில் பாதியளவாகவும் தொடர்கிறது. காஷமீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் பகுதிகளில் இரவு நேர வெப்ப நிலை உறைநிலையையும் தாண்டி மைனஸ் 16 டிகிரி சென்றுள்ளது. மேலும் நேற்று முன்தினம் இமாச்சல பிரதேசத்தில் 3.6 டிகிரியும், அமிர்தசரஸ் பகுதியில் மைனஸ் 1.4 டிகிரியும், லாகூவால், ஸ்பிட்டி மாவட்டங்களில் மைனஸ் 6.4 டிகிரியாகவும் வெப்பநிலை நிலவியது.

பனிமூட்டம் காரணமாக சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பிற்குள்ளானது. தண்டவாளங்களில் பனிக்கட்டி உறைந்து நிற்பதால் ரயில்களை இயக்குவதற்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதால் அங்கு நேற்று முன்தினம் ஒருநாளில் மட்டும் 51 ரயில்களின்  சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக  ரயில்வே நிர்வாக தெரிவித்துள்ளது. வடமாநிலங்களில் குளிர் வாட்டி வதைப்பதால் அங்கு இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்