முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தானே புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.31 - தமிழகம் மற்றும் புதுச்சேரியை மிரட்டி வந்த தானே புயல் நேற்று கரையைக் கடந்தது. இதில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. 26 பேர் தமிழகத்திலும் 7 பேர் புதுச்சேரியிலும் பலியாகியுள்ளனர். தமிழகத்தை மிரட்டி வந்த தானே புயல் நேற்று கடலூரில் கரை கடந்தது. இதனால் கடலூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கோட்டைக்குப்பம் பகுதியில் மரம் பெயர்ந்து விழுந்ததில் பிரகாஷ் என்பவர் வீடு இடிந்தது. இதில் சிக்கிய பிரகாசின் மனைவி சுகந்தி வீட்டுக்குள்ளேயே உயிரிழந்தார்.    சங்கராபுரம் ஆலந்தூரில் குருவப்ப நாயுடு என்ற முதியவர் நேற்று அதிகாலை தெருவில் கிடந்த மின்கம்பியை மிதித்தார். இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பிணமானார்.  

அதுபோல புதுச்சேரி உப்பளம் பிரான்சுவா தோட்டத்தில் ஒரு வீடு இடிந்தது. வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 60 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலருக்கு காயம் ஏற்பட்டது.   வானூரில் வீடு இடிந்து ஒருவர் பலியானார். 6 பேர் காயம் அடைந்தனர். 

சென்னையில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவரும், சென்னையை அடுத்துள்ள ஆவடி பட்டாபிராமில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முன்னாள் ராணுவ வீரர் ஏசுதாஸ் (67) மின்சாரம் தாக்கி இறந்தார். 

தானே புயலின் கோர தாண்டவத்தில் தமிழகத்தில் பலத்த பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அதோடு உயிர்ச்சேதமும் ஏற்படுவது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.  நேற்றுவரை தமிழகத்தில் 26 பேரும், புதுச்சேரியில் 7 பேரும் தானே புயலின் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தை சேர்ந்த 10 குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேசிய பேரிடர் மீட்புப்பணிப் படையைச் சேர்ந்த 15,000 வீரர்கள் மீட்பு பணிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணி உதவிகளுக்கான தொலைபேசி எண்கள் சென்னை மாநகராட்சி ​ 1913, 044​25619237

காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் ​ 1077,

காஞ்சீபுரம் போலிஸ் கட்டுப்பாட்டு அறை ​ 9445465536, 04112​27238001

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் ​ 04116 ​ 27661200

திருவள்ளூர் போலீஸ் கட்டுப்பாட்டு அறை ​ 04116 ​ 27661010.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!