முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவல் துறை உயர் அதிகாரிகள் மீது புகார் - குரேஷி பேட்டி

திங்கட்கிழமை, 14 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.15 - தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல் துறை உயர் அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அளித்த புகாரிகள் வந்துள்ளது. இதை பரிசீலித்து வருகிறோம் என்று தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது பற்றி விபரம் வருமாறு:-

சென்னையில் தேர்தல் பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி அரசியல் கட்சிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள், தலைமை செயலாளர் , உள்துறை செயலாளர் ஆகியோருடன் தலைமை தேர்தல் ஆணையர் நேற்று ஆலோசனை நடத்தினார். அவருடன் தேர்தல் ஆணையர்கள் பிரவீன்குமார், வி.எஸ்.சம்பத், எச்.எஸ்.பிரம்மா ஆகியோரும் ஆலோசனையில் ஈடுபட்டனர். 

நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற ஆலோசனைக்குப் பின் மாலையில்  தேர்தல் ஆணையர்கள் சகிதமாக குரேஷி செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

காலையில் தமிழகம் வந்தோம். தேர்தல் ஏற்பாடுகள் சம்மந்தமாக 9 அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினோம். தேர்தல் ஏற்பாடுகள் சம்மந்தமாக தங்கள் திருப்தியையும், மகிழ்ச்சியையும் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் எங்களிடம் தெரிவித்தார்கள். 

சில நாட்களாக வாகன சோதனை மூலம் முறைகேடாக கொண்டு செல்லும் பணத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சியினரும் திருப்தி தெரிவித்தார்கள். 

மேலும் இந்த நடவடிக்கையா தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின கீழ் அளிக்கப்படும் கூலித்தொகையுடன் ஓட்டுக்கு  முறைகேடாக பணம் கொடுப்பதாக புகார் வந்துல்ளது. அதை கவனமாக பரிசீலித்து வருகிறோம். 

பணப்பட்டுவாடா செய்வது தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்போம். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல் கட்டமாக ஆணையர்கள், காவல்துறை தலைவர்கள், இணை ஆணையர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.  அடுத்து தலைமை செயலாளர் , உள்துறை செயலாளர் , காவல் துறை தலைவர் ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளேன். 

இந்த ஆலோசனையில் தேர்தல் நடைமுறைகள் சம்மந்தமாக கண்காணிப்பது வாக்களர்களுக்கு பணம் தருவதை தடுப்பது, போன்றவற்றை சம்மந்தமாக வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது. வீடுவீடாக வாக்கு சீட்டு கொடுக்கும் பொழுது வாக்காளர்களுக்கு பணம் தருவது நடைபெறுகிறது என்ற புகார் வந்துள்ளது. அதை தடுப்பதற்காகன முயற்சி எடுக்கப்படும். 

பிரச்சார நேரத்தை 10 மணியிலிருந்து 11 மணியாக மாற்றுவது என்பது எங்கள் கையில் இல்லை. 10 மணி வரை பிரச்சாரம் என்பது சுப்ரீம் கோர்ட் உத்தரவு. அதை நாங்கள் மாற்ற முடியாது. 

பதற்றமான வாக்குச்சாவடிகளாக 8 ஆயிரம் வாக்குச்சாவடிகளை இனம்கண்டு உள்ளோம். தேர்தல் விதிமுறை மீறல் சம்மந்தமாக வாக்காளர்களிடமிருந்து வரும் புகார்களை கவனத்தில் கொள்கிறோம். இந்த விஷயத்தில் பத்திரிகைகளும், ஊடகங்களும்தான் எங்களுக்கு உற்ற நண்பன். நீங்கள்தான் அத்தகைய விஷயங்களை வெளியே கொண்டு வரவேண்டும்.

தேர்தல் முடிந்து வாக்கு எண்ணும் வரை இடைபட்ட  1 மாத காலத்திற்கு வாக்குபெட்டிகள் வைக்கப்பட்டுள்ள  இடங்களில் மத்திய துணை ராணுவப்படையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள். அது மட்டுமல்லாமல் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும், பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். 

மேலும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் வெளியேயும், உட்புறமும் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும். வேட்பாளர்கள் மனுத்தாக்கல் முடிந்து வேட்பாளர் பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டதிலிருந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அனைத்து கணக்குகளும் கண்காணிக்கப்படும். வேட்பாளர்கள் தனியாக தேர்தல் செலவுக்கு என்று தனியாக வங்கிக்கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும். தனியாக பரிவர்த்தனை முகவர்களை நியமித்துக் கொள்ளவேண்டும். 

தமிழகத்தில் ஒரே நாளில் வாக்குபதிவு நடத்துவதற்கு காரணம் மற்ற மாநிலங்கள் போல் தமிழகத்தில் தேர்தல் வன்முறைகள் நடைபெறுவதில்லை. கடந்த காலங்களில் வாக்குச்சாவடிகளை கைப்பற்றிய வரலாறுகள் எதுவும் இல்லை. அமைதியான வாக்குப்பதிவு நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. மற்ற மாநிலங்கள் உள்ளதுபோல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவம் தமிழகத்தில் இல்லை. 

மேலும்,  கடந்த சில கூட்டங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும், ஒரே நாளில் தேர்தல் நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் தமிழகத்தில் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுகிறது.  சில இடங்களில் அதிகாரிகள்  ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளது.  அது சம்மந்தமாக பரிசீலித்து வருகிறோம். தனியாக விசாரணை நடத்துவோம். 

எம்.பி.க்களில் தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு 2 கோடியிலிருந்து 5 கோடியாக உயர்த்திய விஷயத்தில் எங்களிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. தேர்தலில் இந்த விவகாரம் பெரிதாக எதிரொலிக்காது. இந்த தேர்தலில் அமைதியான தேர்தலை நடத்த வழிமுறைகளை, வழிகாட்டுதல்களை, பின்பற்ற அனைத்துக் கட்சிகளும் உரிதி அளித்துள்ளனர். பின்பற்றுவார்கள்  என்று நம்புகிறோம்.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தேர்தல் விதிமுறைகளை மீறியது சம்மந்தமாக ஆணையம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு மத்திய அமைச்சர் அழகிரி தான் தேர்தல் தேர்தல் விதிமுறைகளளை மீறியது சம்மந்தமாக வருத்தம் தெரிவித்து இனி வருங்காலங்களில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவேன் என்று உறுதி மொழி கடிதம் கொடுத்துள்ளார். 

 இந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறை உயர் அதிகாரிகள் செயல்படுவதாக (காவல்துறை தலைவர் லத்திகா சரண், உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபி சாபர்சேட், மாநில உளவுப்பிரிவு கண்காணிப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் மீது  ஏற்கனவே அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்து ) அ.தி.மு.க. சார்பில் புகார்கள் வந்துள்ளது.  அதை பரிசீலித்து வருகிறோம். 

இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி செய்தியாளர்களிடம் கூறினார். 

பேட்டியின்போது தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், கூடுதல் அதிகாரி அமுதா, கூடுதல்  ஆணையர்கள்  பிரவீன்குமார், வி.எஸ்.சம்பத், எச்.எஸ்.பிரம்மா ஆகியோரும் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!