முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வக்ஃப் வாரிய சொத்துக்களை மீட்க வேண்டும்: அமைச்சர் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.10 - தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எ.முகம்மது ஜான் தலைமையில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 9.1.2012 அன்று வக்ஃப் வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் கோ.சந்தானம் முன்னிலை வகித்தார்.  முன்னதாக வக்ஃப் வாரிய முதன்மைச் செயல் அலுவலர் ப.அப்துல் ராசிக் அனைவரையும் வரவேற்றார்.  ஆய்வின் போது அமைச்சர் அவர்கள் உரையில், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தைப் பொறுத்த அளவில், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலுள்ள வக்ஃப் சொத்துக்களை கண்காணித்தல், பாதுகாத்தல் மற்றும் வக்ஃப் வாரியத்திற்கு உரிய சகாயத் தொகையை பெறுவது போன்றவை முக்கிய பணிகளாக உள்ளது.  இப்பணிகளை செயல்படுத்துவதில் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். 

 மேலும் வக்ஃப் வாரியக் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்கவும் nullங்கள் அனைவரும் தனி கவனம் செலுத்த வேண்டும்.  வக்ஃப் வாரியத்திற்கு வசூலிக்க வேண்டிய சகாயத் தொகையினை வசூலிக்க தீவிரமாக களப்பணியாற்றி இந்நிதியாண்டு இறுதிக்குள் இலக்குகளை nullர்த்தி செய்ய வேண்டும்.  இந்த நிதியாண்டிற்கான கேட்பு ரூ.3.41 கோடியாக உள்ளது.  கடந்த டிசம்பர் மாதம் வரை ரூ.2.26 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.  இது கடந்த ஆண்டை விட அதிகம் என்பது பாராட்டத்தக்கது.  ஆனால் இந்நிதியாண்டு முடிவடைய இன்னும் 3 மாத காலமே உள்ளதால் உங்கள் பணிகளை மேலும் விரைவுபடுத்தி முமுமையாக வசூல் இலக்கினை அடைய வேண்டும்.  மேலும் கடந்த ஆண்டுகளின் நிலுவைத் தொகையினையும் முழுமையாக வசூல் செய்ய வேண்டும்.

 தமிழ்நாடு முதலமைச்சரின் ஜெயலலிதாவின் சீரிய தலைமையில் அமைந்துள்ள இந்த அரசு சிறுபான்மையினர்களின் நலன்களை பாதுகாப்பதற்கும், வக்ஃப் சொத்துக்களை பாதுகாப்பதற்கும் முன்னுரிமை வழங்கி வருகிறது.  தமிழ்நாடு வக்ஃப் வாரியம் தனக்கென சொந்த கட்டிடம் இல்லாமல் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்ததை கருத்தில் கொண்டு முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கென சொந்த கட்டிடம் வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கட்டிடம் கட்ட ரூ.40 லட்சமும், சுற்றுச்சுவர் கட்ட ரூ.12 லட்சமும் அளித்து அப்பணியினை 21.11.2003 அன்று துவக்கி வைத்தார்.  அதன் பொருட்டே தற்பொழுது வாரியம் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது.   அதே போன்று வக்ஃப் வாரியத்தின் சிறப்பான செயல்பாட்டிற்காக அரசால் வழங்கப்படும் நிர்வாக மானியத்தை ரூ.45 லட்சத்திலிருந்து ரூ. 1 கோடியாக உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  மேலும் ஓய்வு பெற்ற வக்ஃப் வாரிய பணியாளர்களின் ஓய்வூதிய பயன்கள் நீnullண்ட நாட்களாக நிலுவையிலிருந்ததை கருத்திற் கொண்டு சிறப்பு நிதியாக ரூ.3 கோடியும் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.  

மேலும் உலமாக்களுக்கு அரசால் வழங்கப்படும் ஓய்வூதிய தொகையினை ரூ.750/​லிருந்து ரூ.1,000/​ ஆக உயர்த்தியும், உலமா ஓய்வூதிய பயனாளிகளில் எண்ணிக்கையினை 2400-லிருந்து 2600 ஆகவும் உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்.  மேலும் உலமாப் பெருமக்களுக்கு மிதிவண்டி (சைக்கிள்) வழங்கும் திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது.  நடப்பாண்டில் 11,171 உலமாக்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையும் வகையில், மிதிவண்டிகளை வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

எனவே சிறுபான்மையினரின் பாதுகாவலராக விளங்கும் இந்த அரசின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் நீnullங்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி வக்ஃப் வாரியத்தின் சிறப்பான செயல்பாட்டினை உறுதி செய்வதோடு இந்த அரசுக்கு நற்பெயரை ஈட்டித் தர வேண்டும் என்று அலுவலர்களை கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்