முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக் தீவிரவாதிகளை விரைவில் வீழ்த்துவோம்: ஒபாமா

ஞாயிற்றுக்கிழமை, 10 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable


பாக்தாத், ஆக.11 - ஈராக் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை அமெரிக்கா துரிதப்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா சூளுரைத்துள்ளார். ஈராக்கில் அமெரிக்க போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகின்றன.
ஈராக் அரசுக்கு எLிராக போரபாடி வரும்  தீவிரவாதிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. ஈராக்கின் பெரும்பகுதியையும் சிரியாவின் கணிசமான பகுதியையும் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட்டனர். ஈராக்கையும் சிரியாவையும் ஒருங்கிணைத்து இஸ்லாமிய சாம் ராஜ்யம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர். ஈராக்கில் நடைபெற்று வரும் போரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடும் பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர். குறிப்பாக எசிடி இன மக்கள் உணவும், தண்ணீரும், இன்று தவிக்கிறார்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பரிதவிப்பு சொல்லொனா வேதனையை அளித்து வருவதாக சிஞ்சர் மலைப்பகுதியில்  இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிரவாதிகளை குறி வைத்து அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அமெரிக்க போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகின்றன. குர்திஷ் பகுதியின் தலைநகரான எர்பில் நகர் தீவிரவாதிகளின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் சென்று விக்கூடாது என்ற அடிப்படையில் அமெரிக்க போர் விமானங்களின் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஒரு புறம் ஆதரவும் மறுபுறம் எதிர்ப்பும் எவுந்துள்ளது. மனிதநேயத்தின் அடிப்படையில் தான் ஈராக்கில் அமெரிக்கா தலையிட்டுள்ளது என்று அமெரி்கக அதிபர் ஒபாமா  கூறியுள்ளார். விரைவில், தீவிரவாதிகளை வீழ்த்துவோம் என்று அவர் சூளுரைத்துள்ளார்.- எசிடி பழங்குடியின் மக்கள் பரிதவிக்கும் சிஞ்சர் மலைப்பகுதியில் 28,000 உணவு பொட்டலங்களையும், 1,500 கேலன் தண்ணீர் பாக்கெட்டுகளையும் விமானங்கள் மூலம் போட்டதாக அமெரிக்க ராணுவ தலைமைச் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்