எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச்.15 - நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் தினேஷ்திரிவேதி தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட், இந்திய ரயில்வே தற்போது சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கவோ அல்லது ஏதாவது ஒரு இலக்கை அளிக்கவோ முயற்சிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு ஓரிருநாட்களுக்கு முன்பு அளிக்கப்பட்டுள்ள இந்த ரயில்வே பட்ஜெட்டில் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி அளவிற்கு சராசரியாக 25 சதவீதத்திற்கு இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும். இதேபோல பயணிகள் கட்டணத்தையும் அவர் உயர்த்தி உள்ளார். கிலோ மீட்டருக்கு 2 பைசாவிலிருந்து 30 பைசா அளவிற்கு இந்த உயர்வு உள்ளது. சரக்கு கட்டணம் அளவிற்கு பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டவில்லை என்று வாதம் முன் வைக்கப்பட்டாலும், விலை வாசி உயர்வால் ஏற்கனவே துன்பப்படும் ஏழை, எளிய மக்களுக்கு இந்த வரி உயர்வு பெரும் சுமையாக அமையும். கட்டண விதத்தை நேர் செய்வதற்காக 5 ரூபாயாக உயர்த்தப்படுவதும் கண்டிக்கத்தக்கதாகும். பிளாட்பாரம் டிக்கட்கூட ரூ.5-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நிபுணர்கள் அடங்கிய சுயேட்சையான ரயில்வே கட்டண ஒழுங்கு முறை ஆணையத்தை அமைப்பது என்ற அரசின் முடிவானது வருங்காலத்தில் ரயில்வே பட்ஜெட் அனைத்திலும் கட்டண உயர்வுகளை அதிகப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
பொதுவாக கடந்த பல ஆண்டுகளாக ரயில்வேயின் உபரி வருவாய் வீணாக்கப்பட்டு வருகின்றன. அணில் ககோகட்கர் குழு சமீபத்தில் அளித்த அறிக்கையில் ரயில்வேயின் நிதி நிலைமை சீர்கெட்டு இருப்பதாக கூறி, அதை தீர்க்க சில பரிந்துரைகளை அது அளித்துள்ளது. ரயில்வே பாதுகாப்புக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவை என்று கூறியுள்ளது. ரயில்வே அமைச்சர் ரயில்வே பாதுகாப்பு சரியாக இல்லை கூறியுள்ளபோதிலும், அந்த பாதுகாப்பை எப்படி உருவாக்குவது, எப்படி செயல்படுத்துவது என்பதில் அக்கறை செலுத்தவில்லை. அதற்காகன முதலீடுகளையும் அவர் ஒழுங்கு படுத்தவில்லை. பொதுத்துறை, தனியார்துறை ஆகியவற்றுடன் கூட்டுச்சேர்ந்து ரயில்வேயை நவீனமயப்படுத்துதல் திட்டமானது சந்தேகத்திற்கு உரியதாகவே அமைந்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பே இது குறித்து பேசப்பட்டபோதிலும், இதுவரையில் எதுவும் நடக்கவில்லை.
இதேபோல, ஆளில்லாத லெவல் கிராசிங்ற்கு பதிலாக மேம்பாலங்கள், சுரங்கப்பாலங்களை கட்டுவது ஆகியவை குறித்து பேசப்பட்டு வருகிறது. ஆனால் ரயில்வே அமைச்சகம் இதற்கு போதுமான நிதி ஒதுக்காததால் இப்பணிகள் எதுவும் நடக்கவில்லை. இதேபோலதான், ரயில்வே சிக்னல் முறைகளிலும் நிதி வசதி இல்லாததால் மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை. அதற்கான நிதி ஒதுக்கீடும் போதுமானதாக இல்லை.
தொழில் துறையில் மிகவும் முன்னேவரும் தமிழகத்தில் தொழிற்சாலைகளை வளர்ப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. ஆனால், இதற்கு புதிய ரயில்வே பாதைகள், புதிய ரயில்கள் போன்றவை அவசியமானதாகும். மாநிலத்திற்கு உள்ளும், வெளியிலும் தொழிலகங்களை இணைக்ககூடிய வகையில் 16 புதிய ரயில்கள் தேவை என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கான முறையீடும் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடப்பாண்டில் 10 புதிய ரயில்கள்தான் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அவை கூட தமிழகம் கேட்டதில்லை. இதன் மூலம் தமிழக மக்களும், தமிழகமும் கேட்ட குறிப்பிட்ட புதிய ரயில்களை விடக்கூட அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல புதிய ரயில் பாதைகள் சீரமைக்கும் விஷயத்தில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 6 புதிய ரயில் தடங்களையும், விழுப்புரம் காட்பாடிக்கு இடையிலான ரயில்பாதை மின்மயமாக்குதல் போன்றவைகளும் ஏற்கப்படவில்லை. மும்பைக்கு 75 புதிய புறநகர் சேவை ரயில்களும், 44 கூடுதல் சேவைகளும் அளிக்கப்பட்டுள்ளன.
கொல்கத்தாவிற்கு 50 புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஆனால், சென்னைக்கோ, தேவைகள் அதிகம் இருப்பினும், 18 கூடுதல் சேவைகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் நீண்டகால கோரிக்கையாக, தமிழக அரசின் ஒத்துழைப்புடன் ஒரகடத்தை, ஆவடியுடன் இணைக்கும் புதிய ரயில் பாதை திட்டம் குறித்து எதுவும் கூறப்படவில்லை.
இதேபோல விழுப்புரம்-திருச்சிக்கு இடையே இரட்டை வழிபாதை அமைக்கப்பட வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றப்படவில்லை. போதிய நிதி நிலைமை இல்லாததால் 487 திட்டங்கள் முழுமை அடைய முடியாமல் உள்ளது என்பதை ரயில்வே அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். அதேபோலதான் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் புதிய திட்டங்கள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. அந்த திட்டங்களை விரைவாக்க போதிய நிதிஒதுக்கீடும் இல்லை.
2006-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சென்னையில் சரக்கு தளம் அமைக்கும் திட்டம் குறித்த செயல்பாடும், பட்ஜெட்டில் இல்லை என்பதும் ஏமாற்றம் அளிக்கிறது. ஒட்டு மொத்தமாக இந்தியாவின் சராசரி குடிமகனுக்கு ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. வாய்கிழிய பேசுவது போல திட்டவட்டமான செயல்திட்டம் உள்ள திட்டங்கள் எதுவும் இதில் இல்லை.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 5 days ago |
-
34 பேரூராட்சிகள் தரம் உயர்வு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
02 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
-
மத நம்பிக்கையில் தலையிட முடியாது: கண்டதேவி தேரோட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
02 Jul 2025மதுரை : ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பழக்க வழக்கம், மத நம்பிக்கை உள்ளது.
-
காவலாளி அஜித்குமார் மரணம்: த.வெ.க. சார்பிலான ஆர்ப்பாட்டம் வரும் 6-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
02 Jul 2025சென்னை : காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் இன்று த.வெ.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ள நிலையில், த.வெ.க.
-
தொடர்ந்து உயரும் தங்கம் விலை
02 Jul 2025சென்னை : 2-வது நாளாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்து விற்பனையானது.
-
கோவில் காவலர் மரண வழக்கு: திருப்புவனத்தில் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை
02 Jul 2025திருப்புவனம் : காவலர்கள் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனத்தில் வ
-
ஹிந்து தலைவர்கள் கொலை வழக்கில் பயங்கரவாதிகள் இருவர் கைது
02 Jul 2025சென்னை : ஹிந்து முன்னணி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு; அத்வானி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'பைப் குண்டு' வைத்தது என, பல்வேறு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வ
-
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சனை: மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்
02 Jul 2025சென்னை : தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்
-
தமிழகத்தில் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
02 Jul 2025சென்னை, தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை : திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
02 Jul 2025சென்னை : கேலி செய்பவர்களை குறித்து கவலையில்லை என்றும், பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் சென்னையில்
-
சர்வதேச அணுசக்தி அமைப்புடன் ஒத்துழைப்பு இடைநிறுத்தம்: ஈரான்
02 Jul 2025டெஹ்ரான் : ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார்.
-
காசாவில் 60 நாள் போர் நிறுத்தம்; இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்: ட்ரம்ப்
02 Jul 2025வாஷிங்டன் : காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
தைரியமா இருங்க, நாங்க இருக்கோம்: அஜித்குமார் குடும்பத்தாரிடம் எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
02 Jul 2025சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவன் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலம் அ.தி.மு.க.
-
குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியில் சிறப்பாக செயல்படுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
02 Jul 2025திருவாரூர், குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய அறிவுறுத்தப் பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து
-
தேவையில்லாமல் விசாரணை கைதிகளை துன்புறுத்தக்கூடாது : காவலர்களுக்கு ஏ.டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தல்
02 Jul 2025சென்னை : குடும்பமாக செல்வோரிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் விசாரணை கைதிகளை காவலர்கள் தேவையில்லாமல் துன்புறுத்தக்கூடாது என்றும் ஏ.டி.ஜி.
-
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய முன்னணி வீரர், வீராங்கனைகள்
02 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பகல்காம் தாக்குதலுக்கு கண்டனம்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
02 Jul 2025வாஷிங்டன், குவாட் அமைப்பு மாநாட்டில் காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
-
பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலை திட்டம்: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
02 Jul 2025சென்னை : ரூ. 1,853 கோடி மதிப்பில் தொடங்கப்பட உள்ள பரமக்குடி- ராமநாதபுரம் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை அ.தி.மு.க.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது
02 Jul 2025ஒகேனக்கல் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கம் : அன்புமணி நடவடிக்கை
02 Jul 2025சென்னை : பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கோவிட் தடுப்பூசி காரணமில்லை : மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
02 Jul 2025புதுடெல்லி : கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும
-
இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம்: டிரம்ப் தகவல்
02 Jul 2025வாஷிங்டன் : இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம் செய்யப்படலாம்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சமிக்கு ஐகோர்ட் உத்தரவு
02 Jul 2025இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்ன
-
5 ஆண்டுகளும் நான்தான் முதல்வர்: சித்தராமையா திட்டவட்டம்
02 Jul 2025பெங்களூரு : கர்நாடக முதலமைச்சராக 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன் என்று சித்தராமையா உறுதியாக தெரிவித்தார்.
-
முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்கும் அமெரிக்கா
02 Jul 2025புதுடெல்லி : இரண்டு கட்டங்களாக அமெரிக்கா ஹெலிகாப்டர்களை வழங்க உள்ள நிலையில், முதற்கட்டமாக இந்த மாதத்திற்குள் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியா வரவுள்ளன.
-
குரூப் 4 தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு
02 Jul 2025சென்னை : குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.