முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது ஒரு நாள் போட்டி: இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

சனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

போர்ட் ஆப் ஸ்பெயின் : இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அமெரிக்காவில் நடந்த முதல் 2 ஆட்டத்திலும் முறையே 4 விக்கெட் மற்றும் 22 ரன்னில் வெற்றி பெற்றது. கயானாவில் நடந்த 3-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் கயானாவில் நடந்த முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று (11-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. சோனிடென் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்திய அணி வெற்றியுடன் ஒரு நாள் தொடரை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. 4-வது வீரர் வரிசையில் ஷிரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு கிடைக்கும். 5-வது வரிசையில் கேதர்ஜாதவ் ஆடுவார்.

மழையால் பாதிக்கப்பட்ட முதல் போட்டியில் இடம் பெற்ற வீரர்களே நாளையும் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்யப்பட மாட்டாது என்று தெரிகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு ஒரு நாள் தொடரில் பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடன் இருக்கிறது.இரு அணியிலும் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள் விவரம்:-

இந்தியா சார்பில்  விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், ஷிரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவ், ரி‌ஷப்பந்த், ஜடேஜா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், முகமது ‌ஷமி, கலீல் அகமது.வெஸ்ட் இண்டீஸ்: ஹோல்டர் (கேப்டன்), கிறிஸ்கெய்ல், லீவிஸ், ஹோப், ஹெட்மயர், பூரன், ரோஸ்டன் சேஸ், ஆலன், பிராத்வெயிட், கேமர் ரோச், கோட்ரெல்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து