முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழை குழந்தைகளுக்கு காலணி வாங்க போடப்பட்ட பட்ஜெட்டில் நகை வாங்கிய அதிபர் - மனைவிக்கு 58 ஆண்டுகள் சிறை

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

ஹோண்டுராஸ் : ஏழை குழந்தைகளுக்கு காலணி வாங்க போடப்பட்ட பட்ஜெட்டில் நகை வாங்கிய ஹோண்டுராஸ் முன்னாள் அதிபரின் மனைவிக்கு 58 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் அதிபர் மனைவி 52 வயதான ரோசா எலினா பொனிலா, அவரது கணவர் போர்பிரி ஒ லுபோ பதவியில் இருந்த நான்கு ஆண்டுகளில் சர்வதேச நன்கொடை மற்றும் மக்கள் பணத்திலிருந்து 7,79,000 டாலர் மோசடி செய்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், பொனிலா இந்த பணத்தை நகைகள் வாங்கவும் மருத்துவமனையில் பணம் கட்டவும் தன்னுடைய குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்காவும் பயன்படுத்திக் கொண்டார் என குற்றம் சாட்டினார். அவருடைய தரப்பு வழக்கறிஞர் அவர் நிரபராதி எனவும் மேல் முறையீடு செய்வோம் எனவும் வாதாடினார். பிப்ரவரி 2018-ல் மக்கள் பணத்தில் மோசடி செய்த வழக்கு விசாரணையில் பொனிலா கைதானார். ஏழை குழந்தைகளுக்கு காலணி வழங்குவதற்கான பட்ஜெட் அமைத்ததிலும் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பொனிலாவின் உதவியாளர் சால் எஸ்கோபாருக்கும் 48 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை வழங்கும் போது பொனிலாவோ அவரது கணவரோ நீதிமன்றத்தில் இல்லை. பொனிலா இந்த குடும்பத்தில் தண்டணை பெற்ற முதல் நபர் இல்லை. இதற்கு முன் போர்பிரி ஒ லுபோவின் முதல் மகன் பாபியோ அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தியதற்காக 24 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து