முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

18-ம் கால்வாய் நீட்டிப்பு பாசனப் பகுதிகளுக்கான தண்ணீரை கலெக்டர் பல்லவி பல்தேவ் திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019      தேனி
Image Unavailable

தேனி- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தவின்படியும்,  தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் பரிந்துரையின்படி, தேனி மாவட்டம், உத்தமபாளையம் மற்றும் போடிநாயக்கனூர் வட்டம்,  18-ம் கால்வாய் நீட்டிப்பு பாசனப் பகுதிகளுக்கான தண்ணீரை  மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ்,  திறந்து வைத்து, தெரிவித்ததாவது,
 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தவின்படியும்,  தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் பரிந்துரையின்படி, தேனி மாவட்டம், உத்தமபாளையம் மற்றும் போடிநாயக்கனூர் வட்டம்,  18-ம் கால்வாய் நீட்டிப்பு பாசனப் பகுதிகளுக்கான தண்ணீர்  நேற்று (19.11.2019) முதல் 95 கன.அடி , வினாடி வீதம் 15 நாட்களுக்கு மொத்தம் 121 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
18-ம் கால்வாய் நீட்டிப்பு பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட தேவாரம், பொட்டிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள நிலங்களும், போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட ராசிங்கபுரம், சிலமலை, மேலசொக்கநாதபுரம், போடிநாயக்கனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நிலங்களும் என பாசன வசதி பெறும். அதனடிப்படையில், 585 கிணறுகளின் நிலத்தடி நீர் செரிவூட்டப்படுவதன் மூலம் 3848.55 ஏக்கர் நிலங்களும், 7 குளங்களின் கீழ் உள்ள 946.16 ஏக்கர் நிலங்களும், ஆக மொத்தம் 4794.71 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
எனவே, திறந்து விடப்படும் தண்ணீரை விவசாய பெருமக்கள் குறுகியகால பயிர்களை நடவுசெய்தும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தியும் அதிகமகசூல் பெற்று பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளர் கே.சுந்தரப்பன், உதவி செயற்பொறியாளர் எம்.கார்த்திகேயன், உதவி பொறியாளர்கள் கே.மல்லிகா, பி.ராமேஸ்வரன், உத்தமபாளையம் வட்டாட்சியர் உதயராணி மற்றும்  விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து