எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மே.24 - டெங்கு காய்ச்சல் குறித்து பீதி அடைய வேண்டாம் என்றும், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும், மக்கள் இதுகுறித்து அச்சப்பட வேண்டாம் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். 423 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில நாட்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் நிலவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எனது தலைமையிலான அரசு ஏற்கெனவே தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சலால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, டெங்கு காய்ச்சலை உடனடியாக முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று (23.5.2012) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய், தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் முதன்மைச் செயலாளர், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் காய்ச்சலுக்கு காரணமான வைரஸை ஆய்வு செய்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகக் குழுவினர், டெங்கு வைரஸ் வகை1 மற்றும் டெங்கு வைரஸ் வகை3 ஆகியவற்றால் இந்த காய்ச்சல் திடீரென ஏற்பட்டுள்ளதாக கண்டறிந்தனர். இதன் அடிப்படையில், எனது உத்தரவின் பேரில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனது உத்தரவின் பேரில், 17.5.2012 அன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் திருநெல்வேலி சென்று இது குறித்து கடையநல்லூர், தென்காசி நகராட்சிகளில் கள ஆய்வு மேற்கொண்டார். இந்தக் காய்ச்சல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு முகாம் நடத்தப்படவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், அமைச்சர் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்களின் சிகிச்சை குறித்து ஆய்வு செய்ததுடன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். 18.5.2012லிருந்து ஒரு வட்டாரத்திற்கு இரண்டு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முகாம்கள் வீதம், 38 விழிப்புணர்வு முகாம்கள் நாள்தோறும் திருநெல்வேலி மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன என்று ஆய்வு செய்தார். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிகமான நபர்கள் சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக, கூடுதலாக இரண்டு குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாமல், ஒரு வட்டாரத்திற்கு ஒரு nullச்சியியல் வல்லுநரும், மூன்று வட்டாரங்களுக்கு ஒரு மூத்த nullச்சியியல் வல்லுநரும் நியமிக்கப்பட்டு கொசு தடுப்புப் பணிகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தலைமை nullச்சியியல் வல்லுநர் தலைமையில், 25 nullச்சியியல் வல்லுநர்கள் இதற்கான கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வட்டாரத்திற்கு ஒரு மருத்துவ அலுவலரும், ஒரு நகராட்சிக்கு ஒரு மருத்துவ அலுவலரும் நியமிக்கப்பட்டு, விழிப்புணர்வு பிரச்சாரத்திலும், நோய் கண்டறியும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு துணை இயக்குநர்கள் மற்றும் மூன்று சுகாதார அலுவலர்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கென கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். நோய் தடுப்புப் பணிகளுக்கென்று 29 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதையும், அதனைக் கட்டுப்படுத்துவதையும், நோய் தாக்கியவர்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ வசதிகள் அளிப்பதையும் கண்காணிப்பதற்காக எனது உத்தரவின் பேரில் ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. சுகாதாரத் துறை சிறப்புச் செயலாளர், பொது சுகாதாரத் துறை இயக்குநர், பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர், மருத்துவக் கல்வித் துறை இயக்குநர், மருத்துவப் பணிகள் இயக்குநர் ஆகியோர் திருநெல்வேலி மாவட்டத்தில் முகாமிட்டு, தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையிலிருந்து இரண்டு நிபுணர்கள் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியிலிருந்து இரண்டு பொது மருத்துவ நிபுணர்கள் திருநெல்வேலியில் முகாமிட்டு அங்குள்ள மருத்துவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். 16.5.2012லிருந்து ஒரு வட்டாரத்திற்கு 70 தற்காலிக பணியாளர்கள் வீதம் தினக்கூலி அடிப்படையில், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் 1,330 கொசு ஒழிப்புப் பணியாளர்கள் கொசுப் புழு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனது தலைமையிலான அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளின் காரணமாக டெங்கு காய்ச்சல் அண்டை மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு பரவுவது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,466 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 817 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் 423 பேர் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று (23.5.2012) எனது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கையாக புகை மருந்து அடிக்கும் நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு முழுவதிலும் இது தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு செயல்படுத்தப்படும்.
பொதுமக்களுக்கு இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கூடுதலாக 50 வண்டிகள் மூலம் தெரு முனைப் பிரச்சாரமும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் விளம்பரங்களும் மேற்கொள்ளப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமங்கள்தோறும் நடமாடும் மருத்துவக்குழு மூலமாக காலையிலும், மாலையிலும் மருத்துவ முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
திருநெல்வேலி மற்றும் தென்காசி மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக தனி வார்டுகள் அமைக்கப்படும். இதற்காக சென்னையிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் அனுப்பப்படுவர்.
திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் கடையநல்லூர் போன்ற டெங்கு காய்ச்சல் உள்ள இடங்களில் பொதுமக்கள் தண்ணீர் சேமித்து வைப்பதற்கான தேவையை குறைக்கும் வகையில் தினந்தோறும் குடிநீnullர் வழங்கப்படும்.
தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருபவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனரா என கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுவர்.
மற்ற மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை தீவிரமாகக் கண்காணிக்கவும், டெங்கு காய்ச்சல் ஏற்படாத வண்ணம் கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கையையும் தீவிரமாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட மருத்துவ அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசுக்களை ஒழிக்கும் பணிகளை தமிழக அரசு முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில், வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒரு முறை ப்ளீச்சிங் பவுடர் அல்லது சாம்பல் கொண்டு நன்கு கழுவ வேண்டும் என்றும், எந்தக் காய்ச்சல் ஏற்பட்டாலும், உடன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலோ அல்லது அரசு மருத்துவமனைக்கோ அல்லது மருத்துவ முகாமிற்கோ சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்கள் யாரும் டெங்கு காய்ச்சல் குறித்து அச்சப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 6 days ago |
-
ஏறுமுகத்தில் தங்கம் விலை
03 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 3) பவுனுக்கு ரூ.320 உயர்ந்து விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத
-
1,000 ரூபாய் பயண அட்டை மின்சார பஸ்களில் செல்லுமா? போக்குவரத்து கழகம் விளக்கம்
03 Jul 2025சென்னை, மின்சார பஸ்களில் பயண அட்டை செல்லுமா என்பது குறித்து போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: அணையின் நீர்மட்டமும் சரிவு
03 Jul 2025சேலம், மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியாக சரிந்தது அணையின் நீர்வரத்துக் குறைந்த
-
40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை தரமணியில் 'தமிழ் அறிவு வளாகம்' முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
03 Jul 2025சென்னை, 40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
மாலியில் இந்தியர்கள் 3 பேர் கடத்தல்: பத்திரமாக மீட்க இந்தியா கோரிக்கை
03 Jul 2025புதுடெல்லி, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கேய்ஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3 இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவு
-
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
03 Jul 2025டெல்லி, பிரதமர் மோடிககு கானா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
-
விரைவில் கையெழுத்தாகிறது இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்
03 Jul 2025புதுடெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது.
-
20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர்: 'நீட்' மறுதேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Jul 2025சென்னை, நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
வரும் 19-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
03 Jul 2025புதுடெல்லி, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
அடுத்த 2 நாட்களுக்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Jul 2025சென்னை, தமிழகத்தில் நீலகிரி கோவையில் ஜூலை 5 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா: பதக்கங்களை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வழங்கினார்
03 Jul 2025சென்னை, மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழாவில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கினார்.
-
உதயநிதிக்கு கம்ப்யூட்டர் மைண்ட்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
03 Jul 2025வேலூர்: துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது தாத்தா கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட் என துரை முருகன் பேசினார்.
-
அஜித்குமார் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க திருமாவளவன் வலியுறுத்தல்
03 Jul 2025சென்னை, போலீஸ் விசாரணையில் உயிரிழந்த மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு மிரட்டல் உள்ளதால், பாதுகாப்பு வழங்க வேண்டும், ''என விடுதலை சிறுத்தைகள் கட்சியி
-
'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் துவக்கம்: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்தார்
03 Jul 2025சென்னை, சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
-
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 82 பேர் பலி
03 Jul 2025ஜெருசலேம், காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 82 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
03 Jul 2025புதுடெல்லி, டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்துப் பேசினார்.
-
ஆபாச நடனமாடிய விவகாரம்: அர்ச்சகர்களின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
03 Jul 2025ஶ்ரீவில்லிபுத்தூரில், ஆபாசமாக நடனமாடிய ஆர்ச்சகர்களின் முன்ஜாமீன் மனுவை ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
-
அமெரிக்காவுக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: வியன்னாவில் நிறுத்தி வைப்பு
03 Jul 2025புதுடெல்லி, டெல்லியில் இருந்து அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு நேற்று முன்தினம் ஏர் இந்தியா விமானம் புறப்படு சென்றது.
-
இந்தியாவில் ஹாக்கி விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி
03 Jul 2025புதுடில்லி: அடுத்த மாதம் இந்தியாவின் பீஹாரில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
-
காவலாளி அஜித்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரணை
03 Jul 2025திருப்புவனம்: திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு தமிழக மாநில மனித உரிமை ஆணையம் எடுத்தது.
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத வரி: அமைச்சர் ஜெய்சங்கர் கவலை
03 Jul 2025வாஷிங்டன்: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
-
'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் துவக்கம்: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்தார்
03 Jul 2025சென்னை, சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
-
கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம் பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது
03 Jul 2025திருவனந்தபுரம்: பிரிட்டனின் எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விம
-
தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு
03 Jul 2025சென்னை: த.வெ.க.