முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முரசொலி செல்வம் மீது முதலமைச்சர் அவதூறு வழக்கு

புதன்கிழமை, 23 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.24 - முரசொலி பத்திரிகை ஆசிரியர் செல்வம் மீது முதல்வர் ஜெயலலிதா சென்னை கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு குற்றவியல் வக்கீல் எம்.எல். ஜெகன் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 20​ந்தேதி வெளியான முரசொலி பத்திரிகையில், மணல் கொள்ளை தாதாக்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. முதல்​அமைச்சரின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறாக இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 17​ந்தேதியன்று முதல்​அமைச்சர் ஙீஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், மணல் திருடுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இந்த சூழ்நிலையில் முதல்​அமைச்சரின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் முரசொலியில் செய்தி வெளியிட்டதற்காக, ஆசிரியர் முரசொலி செல்வத்தை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை  இரண்டாவது  கூடுதல் nullநீதிபதி முன்பு கோடை விடுமுறைக்குப்பின் விசாரணைக்கு வர உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago