எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம். முருகன் தமிழ்க்கடவுள் ஆவார்.முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகன் தேவ சேனாதிபதி (தேவர்களின் சேனாதிபதி) ஆகையால் இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப் படுகிறது. சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர். சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன. தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் ஒளியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள். பழனி (திருவாவினன்குடி - சக்திகிரி) முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் ஒரு மலைக் கோவிலாகும். மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் மூலவர் சிலையை நவபாஷாணத்தால் செய்து நிறுவியுள்ளார். இக்கோவிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும் முக்கிய விழாவாகும். ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். முருகன் தன் இரு துணைவியரான வள்ளி மற்றும் தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனி வருகிறார். பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறுகிறது. தைப்பூசத்தன்று மக்கள் பழனியில் குவிவது வாடிக்கை. பழனி தைப்பூச விழா முடிந்ததும் ஒருநாளில் அருகில் உள்ள எடப்பாடி கிராமத்தினர் பழனிமலை வந்து இரவுமுழுவதும் தங்கி ஆடிப் பாடிக் கொண்டாடுகின்றனர். தைப்பூசத்துக்குப் பக்தர்கள் பல பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள். நேர்த்திக் கடனாக முருகனுக்கு காவடி எடுக்கிறார்கள். பக்தர்கள் பலநாட்கள் விரதமிருந்து காவடி எடுக்கிறார்கள். காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்று அழைக்கப்படுகின்றன. காவடிகளில் பல வகை உண்டு.
அலகு குத்துதல் - நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.
சர்க்கரை காவடி - சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
தீர்த்தக் காவடி - கொடுமுடியிலிருந்து (கரூர் மாவட்டம்) காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
பறவைக் காவடி - அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுகிறார்.
பால் காவடி - பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
மச்சக்காவடி - மீன் நீருடன் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
மயில் காவடி - மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது
வடலூரில் (இந்தியா) தைப்பூசம்
கடலூர் மாவட்டம் வடலூரில் தை மாதத்தில் தைப்பூசத்தன்று ஞான சபையில் அதி காலை அக்னியான ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வள்ளலார் இராமலிங்க அடிகளார் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள்.. காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும்.
ஈழத்தில் தைப்பூசம்
தைப்பூசத்தில் தான் யாழ்ப்பாண மக்கள் புதிர் எடுப்பர். தைப்பூசம் முருகனுக்கு உரிய சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அன்று அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர்.
அதனைக் குடும்பத்தலைவி பெற்று சுவாமி அறையில் வைப்பார். அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர். அந்த அரிசியுடன் வீட்டிலுள்ள அரிசியையும் கலந்து அன்றைய மதிய உணவு சமைக்கப்படும். ஊரில் உள்ள முருகன் கோயில்களில் பால் குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திகளை நிறைவேற்றுவர்.
வெளிநாடுகளில் தை பூசம்
மலேசியாவில் பத்து மலை முருகன் கோவில் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ளது. இது ஒரு மலைக்கோவில்; சுண்ணாம்புப் பாறைகளாலான மலை இது. வரிசையாக அமைந்த குகை அல்லது குகைக் கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கை பத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்துமலையில் குவிகிறார்கள். தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலிருந்து பத்து மலைக்கு அதிகாலையில் தொடங்கி ஊர்வலமாக நடந்து வருகிறார்கள். இதற்கு எட்டு மணி நேரமாகும். நேர்த்திக்கடன் செலுத்த சிலர் காவடி எடுத்து வருகிறார்கள். அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவோர் உண்டு. சுங்கை பத்து ஆற்றில் நீராடிவிட்டு, மலைக்கோவிலுக்கு 272 படிகள் ஏறி வருகிறார்கள்.
பினாங்கு தைப்பூசம்
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் மாநகர அருகில் உள்ள தண்ணீர் மலை கோவிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தண்ணீர் மலை கோவில் இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் பெரியதாகும். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் தைப்பூசத்தை மிக விமரிசையாகக் கொண்டாடுகிரார்கள். இத்தைப்பூசத் திருநாள் மூன்றுநாள் நடைபெறும். தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
ஈப்போ ஸ்ரீ சுப்பிரமணியன் கோவில்
மலேசியாவில் ஈப்போ அருகில் குனோங் சீரோ என்னுமிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியன் கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது .
சிங்கப்பூரில் தைப்பூசம்
சிங்கப்பூரில் தைப்பூசம் மிகச்சிறப்பாககொண்டாடப்படும் விழாவாகும். தைப்பூசத்திற்கு முதல் நாளில் இருந்தே விழா களைகட்டும். சிங்கப்பூர் முருகன் கோவிலில் வேல் தான் மூலவர். இவருக்கு பாலாபிஷேகம் நீண்ட நேரம் நடக்கும். தைப்பூசத்தன்று முருகன் வெள்ளித் தேரில் லயன் சித்தி விநாயகர் கோவில் வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாலை தேர் திரும்ப முருகன் கோவிலை வந்தடையும். பக்தர்கள் காவடி எடுப்பார்கள். மற்றவர் பெருந்திரளாக தேரினை இழுத்துச் செல்கிறார்கள். அழகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்துவோர் பூசத்தன்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். சீனர்கள் கூட முருகனுக்கு வேண்டுதல்கள் செய்து பூசத்தன்று நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
மொரீஷியசில் தைப்பூசம்
சுப்பிரமணியருக்கு மொரீஷியசில் தைப்பூசத் திருவிழா எடுக்கிறார்கள். காவடி எடுப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்கள் இங்கும் உண்டு.
ஆஸ்திரேலியாவில் (விக்டோரியா) தைப்பூசம்
இலக்கம் 52, பவுண்டரி ரோடு, கெண்டம் டௌன்ஸ், விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோவிலில் இந்து கழகத்தின் சார்பில் தைப்பூசம் விழா நடைபெறுவது உண்டு. சுப்பிரமணியனுக்கு அபிஷேகம், தேரோட்டம் எல்லாம் தைப்பூசத்தன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள். பக்தர்கள் பால்குடம் எடுக்கிறார்கள். பிரசாதம் மற்றும் அன்னதானம் என்று எல்லாம் உண்டு.மிக அற்புதமான பலாபலன்களை அருளும் இந்த தைப்பூசத் திருநாளில் குமரன் அருள் பெற்று மகிழ்வோம். ஆண்டுதோறும் தை மாதத்தில் பௌர்ணமியோடு கூடி வருகின்ற பூசம் நட்சத்திரத்தில் தைப்பூசம் கொண்டாடப்படும். இவ்வாண்டு பிப்ரவரி 8-ம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது. இந்த திருநாளில் முருகனின் கோவிலை நாடிச் சென்று வழிபடுவோம். முருகனின் கருணையால் கவலைகளற்ற வாழ்வை வரமாக பெறுவோம். தைப்பூசத்தன்று சிவாலயங்களுக்கு சென்று அம்மையப்பனையும், கந்தப்பனையும் வணங்கி வழிபட்டு சகல தோஷங்களும் நீங்கப்பெற்று சந்தோஷ வாழ்வை பெறலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ல் வெளியீடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
27 Dec 2025சென்னை, தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ல் வெளியாகும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-12-2025.
27 Dec 2025 -
புதுச்சேரியில் ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச ஆடைகளுக்கு பதில் வங்கி கணக்கில் பணம் வரவு
27 Dec 2025புதுச்சேரி, இலவச ஆடைக்கு பதிலாக நேரடியாக ரேசன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 'இலவச ஆடை' வழங
-
நாகப்பட்டினம் அருகே கரை ஒதுங்கிய ராக்கெட் வடிவிலான மர்ம பொருள்
27 Dec 2025நாகப்பட்டினம், நாகப்பட்டினத்தில் ராக்கெட் வடிவிலான மர்ம பொருள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஆந்திர மாநிலத்தில் 9 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது
27 Dec 2025ஸ்ரீகாகுளம், ஆந்திர மாநிலத்தில் 19 வயதில் 9 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணியை போலீசார் கைது செய்தனர்.
-
போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி: அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு
27 Dec 2025உக்ரைன், புளோரிடா மாகாணத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து பேசுகிறார்.
-
என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசவம் பார்த்தது திருமாவளவன்தான்: நாம் தமிழர் சீமான் பதிலடி
27 Dec 2025சென்னை, என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசம் பார்த்தது திருமாவளவன்தான் என்று சீமான் கூறினார்.
-
எனக்கு வழிகாட்டியவர் விஜய்: செங்கோட்டையன் உருக்கம்
27 Dec 2025திருப்பூர், எனக்கு வழிகாட்டியவர் விஜய் என்று செங்கோட்டையன் கண்கலங்கி தெரிவித்துள்ளார்.
-
ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்: முதலிடத்தில் டென்மார்க்; 96-வது இடத்தில் இந்தியா
27 Dec 2025புதுடெல்லி, ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டென்மார்கும், இந்தியா 96-வது இடத்தில் உள்ளது.
-
தமிழகத்தில் வரும் ஜனவரி 10-க்குள் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்: அமைச்சர் காந்தி தகவல்
27 Dec 2025சென்னை, வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கி முடிக்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி
-
பெண்களை புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது: கனிமொழி எம்.பி. பேச்சு
27 Dec 2025சென்னை, வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை இருப்பதை பெண்கள் புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
2025-ல் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா: மத்திய வெளியுறவுத்துறை தகவல்
27 Dec 2025டெல்லி, 2025-ம் ஆண்டில் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா தான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்
27 Dec 2025டெல்லி, புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
-
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி: ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை
27 Dec 2025சிட்னி, இந்தியாவில் வெறிநாய்க்கடிக்கு போலி தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பாத ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வரும் சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டி: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவேன் என்று டி.டி.வி. தினகரன் அதிரடியாக அறிவித்தார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
27 Dec 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 963 கனஅடியிலிருந்து வினாடிக்கு 836 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.
-
கர்நாடகா, கார்வார் துறைமுகத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நீர்மூழ்கி கப்பலில் பயணம்
27 Dec 2025புதுடெல்லி, கர்நாடக மாநிலத்தில் கார்வார் துறைமுகத்தில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்கிறார்.
-
உக்ரைன் மீது ரஷ்யா திடீர் தாக்குதல்: 8 பேர் படுகாயம்
27 Dec 2025கீவ், உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு இனி ஆதார் அட்டை கட்டாயம்: ஐ.ஆர்.சி.டி.சி. அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அதிரடியாக அறிவித்துள்ளது.
-
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதே காங்., நிலைப்பாடு: செல்வப்பெருந்தகை பேட்டி
27 Dec 2025சென்னை, எங்களை பொறுத்தவரை இண்டியா கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, காங்கிரசுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும் அவர
-
தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு முன்னுரிமை; கனமழையால் பாதித்த பயிர்சேதங்களை கணக்கிட்டு விரைவில் நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: திருவண்ணாமலை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
27 Dec 2025திருவண்ணாமலை, விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில் திராவிட மாடல் அரசு முன்னோடி என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கனமழையால் பாத
-
அரசு பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேர் கைது
27 Dec 2025சென்னை, அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக பலி
27 Dec 2025விருதுநகர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்லையில் நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி: திடீர் போர்நிறுத்தத்தை அறிவித்த தாய்லாந்து-கம்போடியா அரசுகள்
27 Dec 2025பாங்காக், எல்லையில் உடனடியாக போர்நிறுத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து-கம்போடியா அரசுகள் அறிவித்துள்ளன.


