எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு (2020–21) 10 ஆயிரத்து 276 போலீசார் நியமனம் செய்யப்படுவார்கள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். பட்ஜெட்டில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:–
பொருளாதார வளர்ச்சியையும், மக்கள் நல்வாழ்வினையும் பேணுவதற்காக, சட்டம் ஒழுங்கை திறம்படக் கையாள்வது முக்கியமானதாகும். மாநிலக் காவல் படை தனது பணிகளை திறம்பட மேற்கொள்வதை உறுதி செய்ய, போதுமான காவலர்கள், தளவாடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை காவல் துறை பெறுவதை இந்த அரசு உறுதி செய்துள்ளது. காவல் துறையிலுள்ள காலிப் பணியிடங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டு, தற்போது 1.13 லட்சம் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 2019–20 ஆம் ஆண்டில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக, மொத்தம் 10,242 காவல் துறைப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 2020–21ம் ஆண்டில், மேலும், 10,276 சீருடைப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
குற்றங்களையும், குற்றவாளிகளையும் கண்காணிக்கும் கணினி வலையமைப்புத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, இந்த அமைப்பு முறை, 54.84 கோடி ரூபாய் செலவில் மேலும் தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. அப்பாவிப் பொதுமக்கள் இணையவழிக் குற்றங்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும், இணையப் பாதுகாப்பை அதிகரிக்கவும், 28.97 கோடி ரூபாய் செலவில் இணையதள குற்றத் தடுப்புக் காவல் பிரிவு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளுக்காக 431 கோடி ரூபாயும், காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்காக 100 கோடி ரூபாயும் உட்பட, மொத்தமாக 8,876.57 கோடி ரூபாய் காவல் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் பிற பேரிடர் நிவாரணப் பணிகளில் துரித தீர்வு அளிக்க வேண்டியதன் அத்தியாவசியத்தை உணர்ந்து, தேவையான இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களை அவ்வப்போது அரசு தொடங்கி வந்ததால், மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களின் எண்ணிக்கை இப்பொழுது 346 ஆக உள்ளது. 2019-20 ம் ஆண்டில் 18.22 கோடி ரூபாய் செலவில் 16 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உயர் அடுக்குமாடிக் கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்துகளை நவீன முறையில் தடுக்கும் மற்றும் மீட்புப் பணிகளில் உதவும் 104 மீட்டர் தீயணைப்பு ஏணிகள் உட்பட நவீன தீயணைப்பு மீட்புக் கருவிகள் வாங்குவதற்காக 13.67 கோடி ரூபாய் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. பதினைந்தாவது நிதிக்குழு தேசியப் பேரிடர் நிவாரண மற்றும் மேலாண்மை நிதியத்தில், தீயணைப்புப் பணிகள் நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கத்திற்காக 1,000 கோடி ரூபாயை பரிந்துரைத்துள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு முன்மொழிவுகளை அனுப்பும். 2020-21 ம் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்ட மதிப்பீடுகளில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு 405.68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகள், மனிதநேயத்திற்கும், சீர்திருத்த அணுகுமுறைக்கும் நற்பெயர் பெற்றவை. சீர்திருத்த முயற்சியின் ஒரு பகுதியாக, சிறைவாசிகள் சிறைத் தொழிற்கூடங்களில் ஈட்டும் ஊதியத்தில் அவர்களின் பராமரிப்புக்காகப் பிடித்தம் செய்யும் தொகை 50 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறைக்கப்பட்டு, ஊதியத்தில் அவர்களின் பங்கு 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படும். ஒரு புதிய தொடக்க முயற்சியாக, சிறைவாசிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வுக்காக, புழல், வேலூர், கோயம்புத்தூர், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள சிறைகளின் வெளி வளாகங்களிலும், புதுக்கோட்டையிலுள்ள பார்ஸ்டல் பள்ளியிலும் 5 பெட்ரோல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.வரும் நிதியாண்டில், மேலும் 6 பெட்ரோல் நிலையங்கள் அமைக்கப்படும். 2020 - 21ம் ஆண்டில், சிறைத் துறைக்கு 392.74 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் படுகாயங்களை பாதியாகக் குறைக்க வேண்டும் என்பது, 2020-ம் ஆண்டிற்குள் அடைய வேண்டிய நிலைக்கத்தக்க வளர்ச்சிக்கான இலக்குகளில் ஒன்றாகும். 2018-ம் ஆண்டில், சிறப்பான சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான விருதை, மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு பெற்றது. 2016ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2019-ம் ஆண்டில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38.87 சதவீதம் குறைந்துள்ளது. தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டம் 2017ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டம், சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்ட பிறகு, அவசர சிகிச்சை பிரிவில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8.3 சதவீதத்திலிருந்து 2.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. தற்போது அணுக வசதியாக அமைந்துள்ள 80 அரசு மருத்துவமனைகள், தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன. சாலைப் பாதுகாப்பில் தமிழ்நாட்டின் ஆக்கத்திறனை மேலும் மேம்படுத்துவதற்கும், தவிர்க்கக் கூடிய உயிரிழப்புகள் மற்றும் படுகாயங்களை குறைப்பதற்கும், தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு இயக்கத்தினை அரசு உருவாக்கும். இந்த இயக்கம், பல்வேறு துறைகளின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து, ‘சாலை விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைவதற்காக, அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இத்திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விபத்துகளை பொறியியல் சார்ந்த தீர்வு நடவடிக்கைகள் மூலம் சரி செய்தல், ஓட்டுநர் கல்வி, சட்ட அமலாக்கம், விபத்திற்குப் பிந்தைய உயிரிழப்புகளைத் தடுத்தல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தப்படும்.
நெடுஞ்சாலைகள், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, காவல், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களை ஒருங்கிணைத்து, சாலைப் பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீடு 500 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். சாலை வடிவமைப்பில் சாலைப் பாதுகாப்பு அம்சங்களும் உள்ளடங்கியிருப்பதை உறுதி செய்வதற்கு, மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பாதுகாப்பிற்கான தனியானதொரு பிரிவு உருவாக்கப்படும். சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் சாலைப் பாதுகாப்புப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-07-2025.
08 Jul 2025 -
தங்கம் விலை மேலும் உயர்வு
08 Jul 2025சென்னை : இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18-ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
08 Jul 2025சென்னை, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.
-
கவுதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படம்
08 Jul 2025வேரூஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கவுள்ளார்.
-
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா
08 Jul 2025புதிய பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான "புரொடக்ஷன் நம்பர் 1" மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதித்துள்ளது.
-
கயிலன் முன்னோட்டம் வெளியீடு
08 Jul 2025BTK பிலிம்ஸ் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கயிலன்.
-
ஜூலை 11ல் வெளியாகும் தேசிங்குராஜா- 2
08 Jul 2025இயக்குநர் எழில். கடந்த 2013 ம் ஆண்டு தேசிங்கு ராஜா படத்தை இயக்கினார். 12 வருடங்களுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
-
பகுதி நேர ஆசிரியர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
08 Jul 2025சென்னை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி
08 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
நாளை வெளியாகும் சசிகுமாரின் ஃபிரீடம்
08 Jul 2025விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோள் ஜோஸ் நடிப்பில், கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகியுள்ள
-
கடலூர் ரயில் விபத்து; நடந்தது என்ன? ரயில்வே விளக்கம்
08 Jul 2025கடலூர், ரயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தியுள்ளார் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
இணையத் தொடரை இயக்கும் நடிகை ரேவதி
08 Jul 2025ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம்.
-
அரசுப் பணியில் பீகார் பெண்களுக்கு 35 சதவிகித ஒதுக்கீடு வழங்க முடிவு
08 Jul 2025பாட்னா : பீகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
-
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
08 Jul 2025திருநெல்வேலி : நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
08 Jul 2025தேவகோட்டை, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
-
2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் பயணம்
08 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக புதிய இணையதளம்: மத்திய அரசு அறிவிப்பு
08 Jul 2025புதுடெல்லி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
கடலூர் ரயில் விபத்து: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
08 Jul 2025சென்னை, கடலூர் பள்ளி வேன் விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இஸ்ரேலுடனான போரில் இதுவரை 1,060 பேர் பலி : ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Jul 2025தெஹ்ரான் : இஸ்ரேல் தாக்குதலில் 1,190 பேர் ஈரானில் பலியாகி உள்ளனர் என வாஷிங்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குழு தெரிவித்து உள்ளது.
-
கும்பகோணம்-தஞ்சை சாலையில் விபத்து - 4 பேர் பலி
08 Jul 2025தஞ்சை : சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய பேராசிரியை நிகிதா மீண்டும் கல்லூரி பணிக்கு திரும்பினார்
08 Jul 2025திண்டுக்கல் : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீண்டும் பணிககு திரும்பினார்.
-
ஹிமாச்சலில் நிலச்சரிவு; நாயால் 67 பேர் உயிர் பிழைத்த அதிசயம்
08 Jul 2025சிம்லா : ஹிமாச்சலில் நாயின் முன்னெச்சரிக்கையால் 67 பேர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல்
08 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது.
-
'பிசி'யான விமான நிலையங்கள் பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம்
08 Jul 2025புதுடில்லி : உலகின் 'பிசி'யான விமான நிலையங்கள்பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது.
-
பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம்
08 Jul 2025திண்டிவனம், ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.