முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்களுக்கு தலா ரூ.2000, பீடி தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிதியுதவி: கேரள முதல்வர் பினராய் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

கேரளாவில் மீனவர்களுக்கு தலா ரூ.2000, லாட்டரி, பீடி தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412 ஆக உயர்ந்த நிலையில், 199 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 357 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் வரும் 14-ம் தேதியோடு முடிவடைய உள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு வகையான, தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்குவதாக முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார். அவை பின்வருமாறு:-

கேரள தையல் தொழிலாளர் நல நிதி வாரியம், கேரள நகை தொழிலாளர் நல நிதி வாரியம், கேரள வேளாண் தொழிலாளர் நல நிதி வாரியம், கேரள மூங்கில் தொழிலாளர் நலத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். மீனவர்களுக்கும் தலா ரூ . 2,000 வழங்கப்படும். கேரளாவில் சுமார் 1.5 லட்சம் மீனவர்கள் உள்ளனர். சுமார் 50,000 லாட்டரி விற்பனையாளர்களுக்கு தலா ரூ .1,000 வழங்கப்படும். பீடி தொழிலாளர்கள், மூலப்பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாகனங்கள் மூலம் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். நல வாரியத்திடமிருந்து ஓய்வூதியம் பெறாத சுமார் 1,30,000 கயிர் தொழிலாளர்களுக்கு தலா ரூ .1,000 வழங்கப்படும். இவ்வாறு பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து