முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற சிறிது நேரத்தில் பிரதமர் மரணம்: ஐவரி கோஸ்ட்டின் ஜனாதிபதி அறிவிப்பு

வியாழக்கிழமை, 9 ஜூலை 2020      உலகம்
Image Unavailable

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறிது நேரத்தில் ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் மரணம் அடைந்தார் என நாட்டின் ஜனாதிபதி அறிவித்துள்ளார்

ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி இறந்து விட்டார் என்று நாட்டின் ஜனாதிபதி அறிவித்தார்.  ஜனாதிபதி அலசேன் ஓட்டாரா வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், கூலிபாலியின் மரணம் குறித்து நாடு துக்கத்தில் உள்ளது,  ஜனாதிபதி மாளிகையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார். 30 ஆண்டு காலம் தனக்கு நெருங்கிய ஒத்துழைப்பாளராக அவர் இருந்தார். தாயகத்தின் மீது மிகுந்த விசுவாசம், பக்தி மற்றும் அன்பு கொண்டவர். அவர்  ஐவோரியன் தலைவர்களில் மிகுந்த திறமையும், தேசத்திற்கு மிகுந்த விசுவாசமும் கொண்டவர் என்று கூறினார்.

61 வயதான கூலிபாலி இந்த ஆண்டு அக்டோபர் ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சியின் வேட்பாளராக போட்டியிட தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் சமீபத்தில் பிரான்சில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்து திரும்பி வந்தார், அங்கு அவர் சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தார். சமீபத்தில் தான் நாடு திரும்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து