முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்ச் கோப்பை கால்பந்து: பி.எஸ்.ஜி. அணி சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூலை 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பாரீஸ் : பிரெஞ்ச் கோப்பை கால்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி. அணி சாம்பியன் பட்டம் வென்றது.

பிரான்சில், கிளப் அணிகளுக்கான பிரெஞ்ச் கோப்பை கால்பந்து போட்டி நடந்து வந்தது. கொரோனா பாதிப்பால் 4 மாதங்களாக தடைப்பட்டிருந்த இந்த போட்டியின் இறுதி சுற்றில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.)- செயின்ட் எடின்னே அணிகள் வெள்ளிக்கிழமை இரவு மோதின. 5 ஆயிரத்திற்கும் குறைவான ரசிகர்கள் ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

விறுவிறுப்பான இந்த மோதலில் பி.எஸ்.ஜி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் எடின்னேவை தோற்கடித்து 13-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

பி.எஸ்.ஜி. அணியில் நட்சத்திர வீரர் நெய்மார் 14-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.  எடின்னே கேப்டன் லோக் பெரின் 31-வது நிமிடத்தில் எதிரணி வீரர் கைலியன் பாப்பேவின் காலை முட்டியால் மிதித்து இடறி விட்டதால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இதனால் வலது கணுக்காலில் வலியால் துடித்த கைலியன் பாப்பே கண்ணீர் மல்க பாதியிலேயே நடையை கட்டினார். இந்த சீசனில் மொத்தம் 29 கோல்கள் அடித்தவரான பாப்பே அடுத்த மாதம் நடக்கும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்இறுதி ஆட்டத்தில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து