எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 4 டெஸ்டில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 27-ந்தேதி சிட்னியில் நடக்கிறது. ஒரு நாள், 20 ஓவர் தொடர் முடிந்ததும் இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் டிசம்பர் 17-ந்தேதி அடிலெய்டில் பகல்-இரவு ஆட்டமாக தொடங்குகிறது.
தனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பதால் அவரை அருகில் இருந்து கவனிப்பதற்காக முதலாவது டெஸ்ட் போட்டி முடிந்ததும் இந்திய கேப்டன் விராட் கோலி தாயகம் திரும்புகிறார். இதனால் கடைசி 3 டெஸ்டில் அவர் விளையாடமாட்டார்.
ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முதல் டெஸ்ட் முடிந்ததும் கோலி நாடு திரும்ப இருப்பதால் அது நிச்சயம் டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு தாக்கத்தை (பாதிப்பை) ஏற்படுத்தும். கோலி இல்லாததால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் என்று நினைக்கிறீர்களா? ஆஸ்திரேலியாவின் ரிச்மோன்ட் கால்பந்து கிளப் அணியில் இருந்து நட்சத்திர வீரர் டஸ்டின் மார்ட்டினை எடுத்து விட்டால் எப்படி இருக்கும்? அது போன்று தான் கோலி இல்லாத நிலைமையும்.
கடந்த முறை இந்திய அணி இங்கு வந்த போது எங்களை டெஸ்ட் தொடரில் தோற்கடித்தது. அவர்கள் மிகச்சிறந்த அணியாக உள்ளனர். அதனால் கோலி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு நொடி கூட நாங்கள் மெத்தனமாக இருந்து விடக்கூடாது. தொடர் முழுவதும் எங்களது மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தியாக வேண்டும். அதை செய்து காட்டுவதை எதிர்நோக்கி இருக்கிறோம்.
அனேகமாக எனது வாழ்க்கையில் நான் பார்த்த மிகச்சிறந்த வீரர் கோலி தான். இவ்வாறு சொல்வதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அவரது பேட்டிங்குக்காக மட்டுமின்றி விளையாட்டு மீதான அவரது அதீத ஆர்வமும், உத்வேகமிக்க பீல்டிங்குக்காகவும் இதை குறிப்பிடுகிறேன். களத்தில் அவர் எல்லா வகையிலும் வெளிப்படுத்தும் துடிப்புமிக்க ஆற்றலை கண்டு வியப்படைகிறேன். அதனால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தன்னுடைய குழந்தையின் பிறப்புக்காக அவர் இந்தியா திரும்ப எடுத்த முடிவையும் உயர்வாக மதிக்கிறேன்.
கோலியை போன்றே ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் குழந்தை பிறப்புக்காக ஐ.பி.எல். கிரிக்கெட்டை தியாகம் செய்தார். என்னை கேட்டால், உங்களது குழந்தை பிறக்கும் அந்த பொன்னான தருணத்தை நீங்கள் வாழ்வில் ஒரு போதும் தவறவிடக்கூடாது என்பதே எந்த வீரர்களுக்கும் நான் வழங்கும் அறிவுரையாகும். இவ்வாறு லாங்கர் கூறினார்.
ஆஸ்திரேலிய அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கூறுகையில், ‘கடைசி 3 டெஸ்டில் விராட் கோலி ஆடாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. உலகின் மிகச்சிறந்த வீரருக்கு எதிராக விளையாடவே விரும்புகிறோம். ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுஸ்சேன் ஆகியோருடன் விராட் கோலியும் உலகின் சிறந்த வீரராக விளங்குகிறார். எனவே கோலி இல்லாதது ஏமாற்றமே. ஆனாலும் இந்திய அணியில் இன்னும் ‘சூப்பர் ஸ்டார்’கள் உள்ளனர்.
ரஹானே, புஜாரா திறமையானவர்கள். இன்னும் சில இளம் வீரர்களும் வருகை தந்துள்ளனர். இதனால் இந்த தொடர் கடும் சவால் நிறைந்ததாகவே இருக்கப்போகிறது. கோலி இல்லை என்பதால் நாங்கள் எளிதாக கோப்பையை வென்று விட முடியும் என்று அர்த்தம் அல்ல. அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்’ என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
முதல் முறையாக பார்சல்களை அனுப்ப தனி ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
20 Nov 2025சென்னை: பார்சல்களை அனுப்ப தனி ரயில் தொடங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு: விண்ணப்பப்பதிவு அறிவிப்பு திடீர் ‘வாபஸ்'
20 Nov 2025சென்னை: சிறப்பு ஆசிரியர் தகுதிதேர்வு விண்ணப்பப்பதிவு வாபஸ் ஆனது.
-
ரூ.823 கோடிமதிப்பிலான ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்கிறது அமெரிக்கா
20 Nov 2025நியூயார்க்: டாங்கி எதிர்ப்பு ஏவுகண, பீரங்கி குண்டுகள் இந்தியாவுக்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்படும் என்று அமெரிக்க அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-11-2025.
20 Nov 2025 -
அமெரிக்காவில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஏலம் போன ஓவியம்
20 Nov 2025வாஷிங்டேன்: அமெரிக்காவில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஓவியம் ஏலம் போனது.
-
மாணவி கொலை வழக்கு: வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
20 Nov 2025ராமநாதபுரம்: மாணவி கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்துள்ளது.
-
நியூயார்க் மேயரை இன்று சந்திக்கிறோர் ட்ரம்ப்
20 Nov 2025நியூயார்க்: நியூயார்க் மேயர் மம்தானியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திக்கிறார்.
-
ஐதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
20 Nov 2025ஐதராபாத்: ஐதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தயாநிதி மாறனுக்கு நாவடக்கம் தேவை: பா.ம.க. செய்தி தொடர்பாளர் கே.பாலு
20 Nov 2025சென்னை, தயாநிதி மாறனுக்கு நாவடக்கம் தேவை என்று பா.ம.க. செய்தி தொடர்பாளர் கே.பாலு கூறினார்.
-
ஜி-20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி இன்று தென்ஆப்பிரிக்கா பயணம்
20 Nov 2025புதுடெல்லி: ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தென்ஆப்பிரிக்காவுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
-
திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி உதயம்
20 Nov 2025சென்னை, திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை மல்லை சத்யா தொடங்கினார்.
-
பீகார் தேர்தல் தோல்வி எதிரொலி: பிரசாந்த் கிஷோர் மவுன விரதம்
20 Nov 2025டெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிராயச்சித்தமாக ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் நேற்று ஒருநாள் மெளன விரதம் மேற்கொண்டார்.
-
கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
20 Nov 2025சென்னை: தி.மு.க. அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல் - 2 பேரிடம் விசாரணை
20 Nov 2025திண்டுக்கல், திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்து 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
அதிக ஆண்டுகள் முதல்வர் பதவி: டாப் 10-ல் 8-வது இடத்திற்கு முன்னேறினார் நிதிஷ்குமார்
20 Nov 2025பாட்னா, அதிக ஆண்டுகள் முதல்வர் பதவியில் நிதிஷ்குமார் டாப் 10-ல் 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
-
ராஜபாளையம் அருகே கோவில் காவலாளிகள் கொலை வழக்கில் கைதானவர்கள் மருத்துவமனையில் அனுமதி
20 Nov 2025விருதுநகர்: ராஜபாளையம் அருக கோவில் காவலாளிகள் கொலையில் கைதான வாலிபர்களுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
-
ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம்: முதல்வர்
20 Nov 2025சென்னை: ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் பராமரிப்பு பணி: 49 மின்சார ரயில் சேவைகள் ரத்து
20 Nov 2025சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 49 மின்சார ரயில் சேவை, சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டன.
-
அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் சவுதி அரேபியா அறிவிப்பு
20 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
-
மசோதா விவகாரம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு தி.மு.க. வரவேற்பு
20 Nov 2025புதுடெல்லி, மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும விவசாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு தி.மு.க. வரவேற்பு அளித்துள்ளது.
-
பெண்கள் முன்னேறும்போது, சமூகமும் முன்னேறுகிறது: ஜனாதிபதி முர்மு பேச்சு
20 Nov 2025ராய்ப்பூர், பெண்கள் முன்னேறும்போது, சமூகமும் முன்னேறுகிறது என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு தெரிவித்தார்.
-
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: சரத்குமார் கோரிக்கை
20 Nov 2025சென்னை, எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைய பொதுமக்கள் கையில் தான் உள்ளது என்று சரத்துகுமார் கூறினார்.
-
மக்களாட்சி மாண்பை மதிக்காதவர் கவர்னர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
20 Nov 2025சென்னை, மக்களாட்சி மாண்பை மதிக்காத கவர்னர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வளைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
பா.ஜனதா- சிவசேனா மோதல்: அமித்ஷாவுடன் ஷிண்டே சந்திப்பு
20 Nov 2025மும்பை: ஏக்நாத் ஷிண்டே திடீரென டெல்லிக்கு சென்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
-
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்தது ஏன்? மத்திய அரசு விளக்கம்
20 Nov 2025புதுடெல்லி: மெட்ரோ திட்டம் நிராகரித்தது ஏன் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.


