எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : மத ஒற்றுமைக்கு சேவை செய்த குரு நானக் தேவ் வாழ்க்கை மற்றும் இலட்சியங்கள் குறித்த புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
சீக்கிய மதத்தின் நிறுவனர் மற்றும் பத்து சீக்கிய குருக்களிள் முதல்வர் குரு நானக் ஆவார். நேர்மையான வாழ்க்கையை ஒவ்வொருவரும் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்' என்று சொன்ன குருநானக், இன்றைய பாகிஸ்தானில், லாகூர் அருகேயுள்ள டல்வாண்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். இளம் வயது முதலே தெய்விக அனுபவங்களால் திளைத்திருந்த குருநானக், 1499-ம் ஆண்டு அவரது முப்பதாவது வயதில் 'ஞானம்' பெற்றுத் தெய்விக நிலையை அடைந்தார்.
சீக்கியர்கள், குரு நானக்கை தொடர்ந்து வந்த குருக்கள் அனைவரும், குரு நானக்கின் தெய்வீகத்தன்மை மற்றும் மத அதிகாரம் பெற்றிருப்பதாக நம்புகின்றனர். அவர் பிறந்தநாள் 'குரு நானக் தேவ் பிரகாஷ் திவாஸ்' எனக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் பல்வேறு அற்புதச் செயல்களைச் செய்துகாட்டி மக்களை நல்வழிப்படுத்தினார். பின்னர், ஆன்மிகக் கருத்துகளை மக்களிடையே போதித்தார். மக்களிடையே நிலவி வந்த மூட நம்பிக்கைகளைக் களைந்தார். மதத்தால் வேறுபட்டுக் கிடந்த மக்களிடையே அன்பை விதைத்து ஒன்றுபடுத்தினார். 'நாம் கடவுளின் பாதையைப் பின்பற்ற வேண்டும்.
அது மதங்களால் ஆனதல்ல... அன்பு வழியிலான பாதை' என்று விளக்கமளித்தார். மத ஒற்றுமைக்கு மகத்தான சேவை செய்தவர் குருநானக். இவரின் போதனைகள் யாவும் அன்பை வலியுறுத்தியே சொல்லப்பட்டன.
இதனாலே சீக்கிய மதம் இவரது காலத்தில் விரைவாகப் பரவியது. நானக்கின் பிற குழந்தைப் பருவ குறிப்புகள்,ஒரு விஷப் பாம்பு, கடுமையான சூரிய ஒளியில் தூங்கும் குழந்தையின் தலை கவசமாக இருப்பதை ராய் புலர் பார்த்தது போன்ற விசித்திரமான மற்றும் அதிசயமான நிகழ்வுகளை கூறுகிறது.
இந்நிலையில், ஸ்ரீ குரு நானக் தேவ் ஜியின் வாழ்க்கை மற்றும் இலட்சியங்கள் குறித்த புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார். இந்த புத்தகத்தை சண்டிகரை மையமாகக் கொண்ட கிர்பால் சிங் ஜி எழுதியுள்ளார்.
இந்த புத்தக வெளியிட்டு நிகழ்வில், மத்திய சிறுபான்மையினர் நலன்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பங்கேற்றார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “ஸ்ரீ குரு நானக் தேவ் ஜியின் வாழ்க்கை மற்றும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புத்தகத்தை வெளியிட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025