எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், அதைக்கட்டுக்குள் கொண்டுவர கடந்த 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமுலுக்கு வந்தது. மருந்தகங்கள், பாலகங்கள் தவிர அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஊரடங்கில் மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு வந்திருக்கின்றன.
அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. மளிகை, காய்கறிகடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றி வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
எனினும் வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் அனுமதி இல்லை. தனியாக செயல்படுகின்ற மளிகை உட்பட பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.
இவற்றில் ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை. உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.
அனைத்து மின் வணிக சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள், பிரார்த்தனைகள், சடங்குகளை, வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடையில்லை.
மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், குடமுழுக்கு, திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ, 50 நபர்கள் பங்கேற்புடன் நடத்திட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தற்போது, இந்த நடைமுறை மாற்றப்பட்டு, பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், கோயில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. புதிதாக குடமுழுக்கு, திருவிழா நடத்த அனுமதி இல்லை.
திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 25 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்த பட்சம் 50 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும்.
கோல்ப், டென்னிஸ் கிளப் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம், குழுமங்கள் செயல்பட அனுமதி இல்லை. எனினும் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கான பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.
புதுச்சேரி தவிர்த்து, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்கள் http://eregister.tnega.org என்ற வலைதளத்தில் பதிவு செய்த விவரத்தினை தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.
வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு விமானம், கப்பல் மூலம் வரும் பயணியர் அனைவரும் http://eregister.tnega.org என்ற வலைதளத்தில் பதிவு செய்த விவரத்தினை தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.
ஏற்கனவே ஆணையிடப்பட்டவாறு, தனியார் மற்றும் அரசு பேருந்துகளில், இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.
வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில், ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டும் பயணிக்கவும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்கவும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கனடா நாட்டு பொருட்களுக்கு 35 சதவீத வரி: டிரம்ப் அறிவிப்பு
11 Jul 2025வாஷிங்டன் : ''ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீத வரி அமலுக்கு வரும்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு உங்களுக்கு தலைவணங்காது: டெல்லியை அச்சுறுத்தும் தமிழ்நாட்டின் வளர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
11 Jul 2025சென்னை, தமிழ்நாடு உங்களுக்கு தலைவணங்காது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வி போன்றவற்றில் தமிழ்நாட்டின் வளர்ச்சி டெல்லியை
-
கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. பலமாக இருக்கும்: இ.பி.எஸ்.
11 Jul 2025விழுப்புரம் : கூட்டணி இல்லை என்றால் தி.மு.க. இல்லை. கூட்டணி இருந்தாலும், இல்லையென்றாலும் பலமாக இருக்கும் கட்சி அ.தி.மு.க. என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
தமிழ்நாட்டு பயங்கரவாத செயல்கள் இல்லாத மாநிலம் : டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உறுதி
11 Jul 2025சென்னை : வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவ
-
பிரதமரின் வெளிநாட்டு பயணம்: பஞ்சாப் முதல்வர் விமர்சனம்
11 Jul 2025புதுடெல்லி : “பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தானுக்கும் செல்லலாம். ஆனால், அவரைப் போல நம்மால் செல்ல முடியாது” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார்.
-
தங்கம் விலை ரூ.440 உயர்வு
11 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 11) பவுனுக்கு ரூ.440 உயர்ந்து விற்பனையானது.
-
அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்: விஜய்
11 Jul 2025சென்னை : மாவீரர் அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.
-
ஆடு, மாடுகள் முன் சீமான்: அமைச்சர் சிவசங்கர் வருத்தம்
11 Jul 2025அரியலூர் : ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு சீமான் தள்ளபட்டுள்ளார் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
-
ரஷ்யா வெளியுறவு அமைச்சர் வடகொரியா பயணம்
11 Jul 2025மாஸ்கோ : ரஷ்யா வெளியுறவு அமைச்சர் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
-
எடப்பாடி பழனிசாமி தனது பெயரை மாற்றிக்கொள்ளலாம்: அமைச்சர் சேகர்பாபு
11 Jul 2025சென்னை : எடப்பாடி பழனிசாமி தனது பெயரை 'பல்டி' பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 6,990 நடுநிலைப் பள்ளிகளில் ‘ஹைடெக்’ ஆய்வகங்கள் வரும் 15-ம் தேதி திறப்பு
11 Jul 2025சென்னை, தமிழகத்தில் உள்ள 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் ‘ஹைடெக்’ ஆய்வகங்களை, காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளன்று முதல்வர் மு.க.ஸ்
-
ஜி-மெயில் பயனர்களுக்கு கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்
11 Jul 2025வாஷிங்டன் : ஜி மெயில் பயனர்களுக்கு கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது.
-
குன்றக்குடி அடிகளாரின் தொண்டு தொடரட்டும்: முதல்வர் புகழாரம்
11 Jul 2025சென்னை : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கீழடி விவகாரம்: மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
11 Jul 2025சென்னை : கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தேர்தலை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு
11 Jul 2025சென்னை : தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஐரோப்பியவில் கடும் வெப்ப அலைக்கு 2,300 பேர் உயிரிழப்பு
11 Jul 2025பாரீஸ் : ஐரோப்பியவில் கடும் வெப்ப அலைக்கு இதுவரை 2,300 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: அமெரிக்காவுக்கு இந்திய குழு விரைவில் பயணம்
11 Jul 2025புதுடெல்லி : வர்த்தக ஒப்பந்த பேசசுவார்த்தைககு அமெரிக்காவுககு இந்திய குழுவினர் பயணம் செய்ய உள்ளனர்.
-
வழக்கின் சாட்சிகளை அழிக்க முயற்சி: தென்கொரியா முன்னாள் அதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு
11 Jul 2025சியோல் : தென் கொரியா அதிபராக இருந்தவர் யூன் சுக் இயோல். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.
-
பாக்.கில் கிளர்ச்சியாளர்களால் பயணிகள் 9 பேர் சுட்டுக்கொலை
11 Jul 2025கராச்சி : பாகிஸ்தானில் பஸ்சில் சென்ற 9 பேரை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்றனர்.
-
சுபான்ஷு சுக்லா 14-ம் தேதி பூமி திரும்புகிறார் - நாசா அறிவிப்பு
11 Jul 2025புதுடெல்லி : சுபான்ஷு சுக்லா வருகிற 14-ந்தேதி பூமி திரும்புகிறார் என்று நாசா அறிவித்துள்ளது.
-
பீகார் தேர்தலை 'திருட' பா.ஜ.க. முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
11 Jul 2025புவனேஸ்வர் : மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலைப் போல, பீகார் தேர்தலையும் திருட பா.ஜ.க. முயல்கிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
கடமை தவறுவது போல் தெரிகிறது: அ.தி.மு.க. தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும்? தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் கேள்வி
11 Jul 2025சென்னை, அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கடமை தவறுவது போல் தெரிவதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் நிபா வைரஸ் இல்லை: பொதுசுகாதாரத்துறை
11 Jul 2025சென்னை : தமிழகத்தில் 'நிபா' வைரஸ் இல்லை. மக்கள் பீதி அடைய தேவையில்லை என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
குரூப்-4 வினாத்தாள் கசிவா? - டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மறுப்பு
11 Jul 2025சென்னை : குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் விளக்கமளித்துள்ளார்.
-
வரும் 27,28-ம தேதிகளில் 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
11 Jul 2025சென்னை, வரும் 27, 28-ம் தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.