முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு

வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2021      அரசியல்
Image Unavailable

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் நேற்று 8-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. 

மேற்கு வங்க சட்டசபையின் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது. அதே நேரத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்காக முதல்வர் மம்தா பானர்ஜியும், பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.  மேற்குவங்கத்தில் 7 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் நேற்று  8-வது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 35 தொகுதிகளுக்கான இந்த இறுதிகட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணி வரை நடைபெற்றது. 

மால்டா பாகம் 2, கொல்கத்தா வடக்கு, முர்ஷிதாபாத் பாகம் 2, பிர்பும் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.   35 பெண்கள் உள்பட 283 வேட்பாளர்கள், இறுதிகட்ட தேர்தல் களத்தில் உள்ளனர்.  இந்த தொகுதிகளில் காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கடுமையான கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடந்தது.  

மத்திய படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தன. ஏற்கெனவே நடந்த தேர்தல்களில் சில இடங்களில் வன்முறைகள் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மாலை 5:30 மணி நிலவரப்படி 76.07 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக கூறப்பட்டுள்ளது. மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து