முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தக்தே புயல் சேதங்களுக்கு மத்தியில் மழையில் குத்தாட்டம் போட்ட நடிகை

வியாழக்கிழமை, 20 மே 2021      சினிமா
Image Unavailable

Source: provided

மும்பை : மும்பையில் புயல் சேதங்களுக்கு இடையே மழையில் குத்தாட்டம் போட்டு அந்த வீடியோவை வலைதளங்களில் வெளியிட்ட நடிகைக்கு கண்டனங்கள் வலுத்துள்ளது. 

குஜராத்தில் கரையை கடந்த தக்தே புயல், மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை தீபிகா சிங், புயலில் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே நடனமாடியும், புகைப்படங்கள் எடுத்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். 

புயலை நாம் தடுத்து நிறுத்த முடியாது. அதுவாகவே கடந்து போகும் என்றும் நடிகை தீபிகா சிங் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று, தக்தே புயல் சேதம் என சோகத்தில் மூழ்கி இருக்கும் மும்பை வாசிகளை சின்னத்திரை நடிகை தீபிகா சிங்கின் செயற்பாடுகள் எரிச்சலடைய செய்துள்ளது.

புயலில் சிக்கி மக்கள் உயிரிழக்கும் போது அதனை இப்படி ரசித்து நடனமாடுவதா? என்று தீபிகா சிங்கிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தீபிகா சிங்கின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து