முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரிவரிசையில் விராட் கோலி தொடர்ந்து 5-வது இடம்

வியாழக்கிழமை, 10 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய் : சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரிவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5-வது இடத்தில் நீடிக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு உள்ளது. பேட்ஸ்மேன்களில் இந்திய கேப்டன் விராட் கோலி 5- வது இடத்திலும், ரிஷப் பண்ட் மற்றும் ரோகித் சர்மா( 747 புள்ளிகள்) கூட்டாக இணைந்து 6-வது இடத்தில் நீடிக்கின்றனர்.  கடந்த 18-ம் தேதி முதல் நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி இந்தியாவை வழிநடத்துவார். ஒரு இடத்தைப் பெற்ற பந்த் மற்றும் ரோகித் தலா மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

பந்துவீச்சாளர் தரவரிசையில் தமிழக வீரர் அஸ்வின் மட்டும் 2-வது இடத்தில் நீடித்து டாப் 10 வரிசையில் இருக்கும் ஒரே இந்திய வீரர் ஆவார்.  அதேபோல் ஆல்-ரவுண்டர் தரிவரிசையில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா 2-வது இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4-வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பாததால் தரவரிசையில் தொய்வு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

347 பந்துகளில் 200 ரன்கள் எடுத்த நியூசிலாந்தின்  டெஸ்ட் அறிமுக வீரர் டெவன் கான்வே டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 447 புள்ளிகளுடன் 77 வது இடத்தில் நுழைந்துள்ளார். நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன் 895 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து