முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியாக ரூ. 50-க்கு மேல் வசூலிக்கக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மாணவர் சேர்க்கையின் போது பெற்றோர், ஆசிரியர் கழக நிதியாக 50 ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பள்ளிகளில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை கடந்த 14-ம் தேதி முதல் நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவர் சேர்க்கையின் போது பெற்றோர்-ஆசிரியர் கழக நிதியாக 50 ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது எனவும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள பள்ளிக்கல்வித்துறை, 5 வயது குழந்தைகள் அனைவரும் பள்ளிகளில் சேர்ந்திருப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதே போல, தங்களது பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவரும் 9-ம் வகுப்பை தொடர்கிறார்களா என்பதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து